வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

இலங்கை வீரர்களுக்கு பயிற்சி: 25-ல் வெலிங்டன் ராணுவ பயிற்சி பள்ளி முற்றுகை

இலங்கை ராணுவ வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பதைக் கண்டிக்கும் வகையில் குன்னூர் வெலிங்டன் ராணுவப் பயிற்சி பள்ளியை ஜூன் 25-ஆம் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

News image
Updated On :22 ஜூன் 2013, 4:22 am IST

இலங்கை ராணுவ வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பதைக் கண்டிக்கும் வகையில் குன்னூர் வெலிங்டன் ராணுவப் பயிற்சி பள்ளியை ஜூன் 25-ஆம் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ் இனத்தையே பூண்டோடு அழிக்கும் எண்ணத்தோடு திட்டமிட்டுச் செயல்படும் இலங்கை ராணுவத்தினருக்கு தமிழகத்தில் மத்திய அரசு தொடர்ந்து பயிற்சி அளிக்கிறது.

தமிழ் உணர்வாளர்களின் எதிர்ப்பைக் காங்கிரஸ் அரசு கண்டுகொள்ளவே இல்லை. கடந்த மே 27-ஆம் தேதியில் இருந்து சிங்கள ராணுவத்தின் விங் கமாண்டர் தசநாயகே, மேஜர் ஹரிச்சந்திரா ஆகியோர் பயிற்சியைத் தொடருவது மட்டுமல்ல, அக்கொடியோர் நீலகிரி மாவட்டத்தில் இன்பச் சுற்றுலாவும் நடத்தியுள்ளனர். ஒரு பக்கத்தில் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை நாள்தோறும் தாக்குவதும், சிறைப் பிடிப்பதும் தொடர்கிறது.

எனவே, 25-ஆம் தேதி காலை 11 மணிக்கு குன்னூர் வெலிங்டன் ராணுவப் பயிற்சிப் பள்ளியை முற்றுகையிட்டு, மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுப்போம் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.