வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

என்.எல்.சி. பங்குகள் விற்பனை: மார்க்சிஸ்ட் கண்டனம்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி.) 5 சதவீத பங்குளை விற்பது என்ற மத்திய அரசின் முடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளது.

News image
Updated On :22 ஜூன் 2013, 4:23 am IST

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி.) 5 சதவீத பங்குளை விற்பது என்ற மத்திய அரசின் முடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

என்.எல்.சி.யின் 5 சதவீத பங்குகளை விற்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

நிதிப்பற்றாக்குறையைச் சமாளிக்க எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையின் மூலம் அரசுக்கு ரூ. 466 கோடி கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரச் சீர்திருத்தங்கள் வேகமாக செயல்படுத்தப்படும் என பிரதமரும், நிதி அமைச்சரும் அறிவித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு என்.எல்.சி.யின் 10 சதவீத பங்ககளை விற்க முயற்சித்த போது, மக்களின் எதிர்ப்பைக் கண்டு அந்த முயற்சியில் இருந்து மத்திய அரசு பின்வாங்கியது. இடதுசாரி கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக மத்திய அரசுக்கு ஆதரவான கட்சிகள் கூட தங்களது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

என்.எல்.சி.யின் பங்குகளை விற்க அரசு முடிவு செய்துள்ள செய்தி வெளியானதும் கடந்த மாதமே மார்க்சிஸ்ட் தனது எதிர்ப்பை தெரிவித்தது. பங்கு விற்பனையை கைவிடுமாறு தமிழக முதல்வரும் பிரதமருக்கு கடிதம் எழுதினார். தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்தன.

ஆனால், அனைத்துத் தரப்பினரின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது. பொதுத்துறையை அழித்து தனியார்மயத்துக்கு வலுவூட்டும் மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் என ஜி. ராமகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.