வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

தடுப்புச் சுவரில் கார் மோதல்: ஒருவர் சாவு

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே வெள்ளிக்கிழமை தடுப்புச் சுவர் மீது கார் மோதியதில் சென்னையைச் சேர்ந்தவர் உயிரிழந்தார்.

Updated On :21 ஜூன் 2013, 10:08 pm

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே வெள்ளிக்கிழமை தடுப்புச் சுவர் மீது கார் மோதியதில் சென்னையைச் சேர்ந்தவர் உயிரிழந்தார்.

சென்னை, செங்குன்றத்தைச் சேர்ந்த சண்முகக்கனி மகன் மகாலிங்கம் (55). இவரும், செங்குன்றத்தைச் சேர்ந்த முனியசாமி மகன் தினேஷ் (24), சென்னை பாடியநல்லூர் கணேசன் மகன் கண்ணன் (40) ஆகியோர் காரில் தூத்துக்குடி வந்தனர்.

தூத்துக்குடியில் வேலையை முடித்துவிட்டு, சென்னைக்கு காரில் வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றனர். அப்போது எப்போதும்வென்றானை அடுத்துள்ள சிவஞானபுரம் விலக்கு அருகே எதிர்பாராதவிதமாக அங்குள்ள தடுப்புச் சுவரில் மோதி கார் கவிழ்ந்தது.

இதில் சம்பவ இடத்திலேயே மகாலிங்கம் உயிரிழந்தார். காயமடைந்த தினேஷ் மற்றும் கண்ணன் ஆகியோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.