மாநிலங்களவை உறுப்பினர் பதவி கனிமொழிக்குக் கிடைத்ததும், என்.எல்.சி. பங்குகள் விற்கப்படுவதை திமுக மறந்துவிட்டதாக முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்த குற்றச்சாட்டுக்கு திமுக தலைவர் கருணாநிதி விளக்கம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
என்.எல்.சி. பங்கு விற்பனை தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கனிமொழிக்குப் பதவி கிடைத்ததும், நிலக்கரியை நான் (கருணாநிதி) மறந்துவிட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் 13 ஆயிரம் பேர் 10 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி, 2012 ஏப்ரல் 24-ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மத்திய அரசும், மாநிலத்தில் உள்ள அதிமுக அரசும் உடனடியாக நெய்வேலி நிர்வாகத்தோடு தொடர்புகொண்டு பேசி, பிரச்னைக்கு சுமுக தீர்வு காண வேண்டும் என்று நான் கோரியிருந்தேன்.
ஆனால் இந்தப் பிரச்னை தொடர்பாக சட்டப்பேரவையில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கேள்வியெழுப்பியபோது, என்.எல்.சி. தொழிலாளர் போராட்டப் பிரச்னை தமிழக அரசின் அதிகார வரம்புக்குள் வருவது இல்லை என்று அரசின் சார்பில் பதில் அளிக்கப்பட்டது.
நிலக்கரியை மறந்தது நானா? அதிமுக அரசா? கடந்த ஆண்டு மத்திய அரசின் சார்பில் என்.எல்.சி. பங்குகளை விற்பதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்ட நேரத்தில், இது தொழிலாளர்களை வம்புக்கு இழுக்கும் செயல். மத்திய அரசு மேலும் எதிர்ப்பைத் தேடிக்கொள்ள வேண்டாம் என்று எச்சரிப்பதாக அறிக்கை விடுத்திருந்தேன்.
மேலும் ஜூன் 26-ஆம் தேதி என்.எல்.சி. தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், பங்குகள் விற்பதைவிட, மாற்று வழியை ஆராயுமாறு பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தையும் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் கனிமொழிக்காக நிலக்கரியை மறந்துவிட்டேன் என்று குற்றம்சாட்டி அறிக்கை விடுவது என்ன பெருந்தன்மை?
மத்திய நிறுவனத்தின் பங்குகளை மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் வாங்குவது பற்றி பரிசீலிக்க வேண்டும் எனறு மத்திய அமைச்சர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், என்.எல்.சி.யின் 5 சதவீத பங்குகளை, தமிழக அரசிடம் கொடுக்கத் தயாராக உள்ளோம். கூடுதலாக 5 சதவீத பங்குகளைக்கூட கொடுக்கத் தயாராக உள்ளோம் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா என்.எல்.சி. பங்குகளைக் கோரி ஜூலை 2-ஆம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
எனவே, ஜெயலலிதா அறிவித்துள்ள ஆர்ப்பாட்டம் நிலக்கரிக்காகவா, சேதுசமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி திமுக சார்பில் ஜூலை 8-ஆம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்காகவா அல்லது அதிமுகவின் ஆர்ப்பாட்டத்தால்தான் நெய்வேலி நிலக்கரி நிறுவனப் பங்குகளை தமிழக அரசுக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்தது என்று சொல்வதற்காகவா என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 93.32! 49 காசுகள் சரிவு!

அர்த்தமில்லாமல் பேசும் உதயநிதி தமிழிசை சௌந்தரராஜன் | BJP | DMK

மறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை! இபிஎஸ் விளக்கம்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


