சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள குப்பனூர் தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரியும், காரும் ஞாயிற்றுக்கிழமை இரவு மோதி விபத்துக்குள்ளாயின. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். இருவர் பலத்த காயமடைந்தனர்.
சேலம் அருகே மணியனூர், கந்தாயம்மாள் நகரைச் சேர்ந்த வெள்ளிப் பட்டறை உரிமையாளர் கணேசன். இவர் தனது மகன் தினேஷை கோவை தனியார் கல்லூரியில் விட்டு விட்டு மீண்டும் ஊருக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார்.
காரில் அவரது மனைவி இந்திரா, மகள் சாலினி, மற்றொரு மகன் கௌதம், இந்திராவின் தந்தை கோபால், இவரது மனைவிகள் லீலாவதி, செல்வி ஆகியோர் பயணம் செய்தனர். மங்கேஷ் காரை ஓட்டினார்.
அவர்கள் சென்ற கார் சங்ககிரி அருகே உள்ள குப்பனூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது எதிரே வந்த லாரி, கார் மீது வேகமாக மோதியது. இதில், கார் ஓட்டுநர் மங்கேஷ் (26), இந்திரா (35), கௌதம் (19), கோபால் (65), இவரது மனைவி லீலாவதி (55) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கோபாலின் மற்றொரு மனைவி செல்வி பலத்த காயங்களுடன் சங்ககிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு உயிரிழந்தார். பலத்த காயமடைந்த கணேசன், சாலினி ஆகிய இருவரும் தீவிர சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து சங்ககிரி போலீஸôர் வழக்குப் பதிவு செய்து வசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சக்திவேல், சங்ககிரி டிஎஸ்பி ராமசாமி, சங்ககிரி வருவாய்க் கோட்டாட்சியர் எம்.ரத்தினசாமி, வட்டாட்சியர் ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் விபத்து நிகழ்ந்த இடத்தைப் பார்வையிட்டு, விசாரணை நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஈரான் - அமெரிக்கா மோதல்: கத்தார் சென்றடைந்த அமெரிக்க தூதுக்குழு!

சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் எவ்வித மாற்றமில்லை!

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

டி20 உலகக் கோப்பையில் அசத்திய அணிகளின் வீராங்கனைகள் ஐசிசி தவரிசையில் முன்னேற்றம்!
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



