பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு: புலனாய்வு திறன் மிக்க தனிப்படை அமைப்பு

ஆடிட்டர் ரமேஷ் கொலைக் குற்றவாளிகளைக் கண்டறிய தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்ட, மாநகரப் போலீஸில் உள்ள சிறந்த புலனாய்வுத் திறன் மிக்க அதிகாரிகளைத் தேர்வு செய்து தனிப்படை அமைத்து விசாரிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2013, 12:10 am

ஆடிட்டர் ரமேஷ் கொலைக் குற்றவாளிகளைக் கண்டறிய தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்ட, மாநகரப் போலீஸில் உள்ள சிறந்த புலனாய்வுத் திறன் மிக்க அதிகாரிகளைத் தேர்வு செய்து தனிப்படை அமைத்து விசாரிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

கடந்த 19-ஆம் தேதி சேலத்தில் பாரதிய ஜனதா கட்சி மாநில பொதுச் செயலாளர் ரமேஷும், ஒரு மாதத்துக்கு முன், வேலூரில் இந்து முன்னணி மாநிலச் செயலாளர் வெள்ளையப்பனும் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

இக்கொலைச் சம்பவங்கள் குறித்து விசாரிக்க முதல்வர் உத்தரவின்படி, சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்டு இரண்டு வாரங்கள் ஆகிவிட்ட நிலையில், தமிழகம் முழுவதும் சந்தேகிக்கப்படும் பகுதிகளில் போலீஸôர் கண்காணித்து, ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழைய குற்றவாளிகளிடமும் விசாரணை நடத்தப்படுகிறது.

இக் கொலைகளைப் பொறுத்த வரை யாரும் எதிர்பார்க்காத வகையில் பா.ஜ.க.வின் அழுத்தம் கடுமையாக உள்ளது. அக் கட்சியின் தேசியத் தலைவர் முதற்கொண்டு அனைத்துத் தலைவர்களும் உற்றுநோக்கும் விஷயமாக உள்ளது. சி.பி.சி.ஐ.டி. போலீஸôரும் இதில் சிறப்புக் கவனம் செலுத்தி விசாரித்து வருகின்றனர்.

இருப்பினும், இந்த வழக்கில் உருப்படியான பிடிப்பு எதுவும் போலீஸôருக்குக் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந் நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில், குற்ற வழக்குகளில் சிறந்த புலனாய்வு மற்றும் துப்பறியும் திறன் கொண்ட ஆய்வாளர்களைத் தேர்வு செய்து தனிப்படை அமைத்து விசாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

÷இதற்காக, கோவை மாநகரக் காவல் எல்லைக்கு உள்பட்ட சாயிபாபா காலனி சட்டம்-ஒழுங்கு ஆய்வாளர் சந்திரமோகன், மாவட்டக் குற்றப்பிரிவு ஆய்வாளர் பாலமுருகன் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள், சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளுடன் சேர்ந்து தனிப்படையாக விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

÷குறிப்பாக, கொலை நடந்த நேரத்திலிருந்து அரை மணி நேரம் முன்பாகவும், பின்பாகவும் அப் பகுதி முழுவதும் செயல்பாட்டில் இருந்த செல்ஃபோன் எண்களைச் சேகரித்து, அதிகம் பயன்படுத்தப்பட்ட மற்றும் சந்தேகிக்கும் எண்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.