மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்குக் கரை கால்வாய்களில் இருந்து வெள்ளிக்கிழமைமுதல் (ஆகஸ்ட் 2) தண்ணீர் திறந்துவிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:
மேட்டூர் அணையில் இருந்து மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்குக் கரை கால்வாய் பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடும்படி சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களின் விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. இதையேற்று, மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்குக் கரை கால்வாய்களில் நடப்பாண்டு பாசனத்துக்காக வெள்ளிக்கிழமைமுதல் (ஆகஸ்ட் 2) தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளேன்.
இதனால், ஈரோடு மாவட்டத்தில் 17 ஆயிரத்து 230 ஏக்கர் நிலங்களும், சேலம் மாவட்டத்தில் 16 ஆயிரத்து 443 நிலங்களும், நாமக்கல் மாவட்டத்தில் 11 ஆயிரத்து 327 ஏக்கர் நிலங்களும் ஆக மொத்தம் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று முதல்வர் ஜெயலலிதா தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!

மேட்டுப்பாளையம் அருகே ஊருக்குள் நுழைந்த காட்டு யானை பாகுபலி: மக்கள் அச்சம்

தொடர் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களுக்கு முதல்வர் விஜய் என்ன பதில் சொல்லப் போகிறார்? டிடிவி தினகரன்
உயர்கல்வி தேர்வு! விழிப்புணர்வின்மை, தெளிவின்மை!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


