ஒகேனக்கல்லை நம்பி வாழ்க்கையை நடத்தி வரும் பரிசல் ஓட்டிகள் உள்ளிட்டோரைக் கருத்தில் கொண்டு, குறிப்பிட்ட தொலைவு வரை பரிசல் இயக்க ஞாயிற்றுக்கிழமை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், பழுதடைந்துள்ள அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்புப் பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக அதிகளவில் உபரி நீர் வெளியேற்றப்பட்டதால், ஒகேனக்கல்லுக்கு அதிகபட்சமாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் கன அடி வரை நீர்வரத்து இருந்தது. இதையடுத்து, ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல்களை இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.
இந்த நிலையில், ஒகேனக்கல் காவிரியாற்றில் இழுத்துச் செல்லப்பட்டவரை மீட்கச் சென்ற பரிசல் ஓட்டிகள் மூன்று பேரும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். இவர்கள் அனைவரும் இந்திய விமானப்படை வீரர்களால் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தையடுத்து, ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் சோதனைச் சாவடியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டன.
இதனால், ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை முற்றிலும் தடுக்கப்பட்டதால், அவர்களை நம்பி தங்களது வாழ்க்கையை நடத்தி வரும் பரிசல் ஓட்டிகள் உள்ளிட்டோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு ஞாயிற்றுக்கிழமை 16 ஆயிரம் கன அடியாகக் குறைந்ததால், தடையை நீக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, வருவாய்க் கோட்டாட்சியர் பி.மேனகா, பென்னாகரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் நடராஜன், வட்டாட்சியர் தேவிகா, தீயணைப்பு உதவிக் கோட்ட அலுவலர் கார்த்திகேயன், உதவி வனப் பாதுகாவலர் வரதராஜன் மற்றும் பரிசல் ஓட்டிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மகளிர் மற்றும் ஆடவர் குளிக்கும் பகுதிகள் பழுதடைந்துள்ளதால், சீரமைப்புப் பணிகள் முடிவடையும் வரை அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்படுகிறது.
பரிசல் ஓட்டிகள் மீன் விற்பனை நிலையத்திலிருந்து 300 அடி தொலைவு வரை பரிசலில் செல்ல அனுமதிக்கப்படுவர். பரிசலில் செல்பவர்கள் அனைவரும் பாதுகாப்பு ஜாக்கெட் அணிய வேண்டும். ஐந்து பேருக்கு மேல் அனுமதிக்கக் கூடாது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே பரிசல் ஓட்ட வேண்டும்.
பாதுகாப்பு கருதி தொங்கும் பாலத்துக்குச் செல்லும் வழி தடை செய்யப்படுகிறது. சின்னாற்றில் நீர்வரத்து ஏற்படும் போது கோத்திக்கல் பரிசல் துறையில் பரிசல் பயணத்துக்கு தடை செய்யப்படுகிறது.
பரிசல் ஓட்டும் இடம், நடைபாதை, முதலைப்பண்ணை, பழைய பரிசல் துறை உள்பட மக்கள் குளிக்க வாய்ப்புள்ள இடங்களில் போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர். சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் பேருந்து நிலையம் வரை செல்ல அனுமதிக்கப்படுகின்றன. இந்த புதிய நடைமுறைகளுக்கு பரிசல் ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”தனுசு ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சுரேஷ் ரெய்னாவை ஞாபகப்படுத்தும் சர்ஃபராஸ் கான்..! சிஎஸ்கே ரசிகர்களிடையே பெருகும் ஆதரவு!
முற்றிய நெற்கதிரைக் கவனமாக அறுவடை செய்வதுதான் தேர்தல் களப்பணி: முதல்வர் ஸ்டாலின்

கிண்டலுக்கு ஆளான லோகேஷ் கனகராஜ்!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை


