கொடநாட்டில் தங்கியுள்ள முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை சென்னை திரும்புகிறார்.
முதல்வர் ஜெயலலிதா கடந்த ஜூன் 28-ஆம் தேதி நீலகிரி மாவட்டம், கொடநாட்டுக்கு வந்தார். இங்கிருந்தபடியே அரசுப் பணிகளைக் கவனித்து வந்த முதல்வர், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் ஆய்வுப் பணியிலும் ஈடுபட்டார். இந் நிலையில், ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக முதல்வர் சென்னை திரும்புகிறார்.
வழக்கமாக, முதல்வர் பயணிக்கும் ஹெலிகாப்டர் கொடநாடு எஸ்டேட் பகுதியிலிருந்து புறப்பட்டு கோவை விமான நிலையத்தைச் சென்றடையும். ஆனால், இப்போது நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் கடுமையான மேகமூட்டம் நிலவுகிறது. அதனால், ஹெலிகாப்டர் கொடநாடு எஸ்டேட் பகுதியிலிருந்து புறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
திங்கள்கிழமையும் வானிலை மோசமாக இருந்தால் ஜூட்ஸ் பள்ளி மைதானத்தில் இருந்து முதல்வர் புறப்படும் வகையில் அவரது பயணத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்காக, ஜூட்ஸ் பள்ளி மைதானத்தில் ஹெலிகாப்டரை இறக்கி சனிக்கிழமை ஒத்திகை பார்க்கப்பட்டது.
முதல்வர் திங்கள்கிழமை நண்பகல் 12 மணிக்குப் புறப்படுவதாகத் தெரிகிறது. இதனால், பாதுகாப்புக் காரணங்களுக்காக உதகை-கோத்தகிரி சாலையிலும், கொடநாடு-வெஸ்ட்புரூக் சாலைப் பகுதி வரையிலும் போலீஸôர் பணியமர்த்தப்பட்டுள்ளதோடு, வாகனத் தணிக்கையும் நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாஜக கூட்டணியில் இணைய சரத் பவாருக்கு மத்திய அமைச்சா் அழைப்பு

நிா்வாக வசதிகளுக்காக சென்னை மாநகராட்சியைப் பிரிக்க வேண்டும்: கராத்தே தியாகராஜன்
உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி

ஃபாா்முலா ஒன் (எஃப்1) காா் பந்தயம்: ஹாமில்டன் வெற்றி!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



