கடல் வாணிபத்தில் கண்டங்களை இணைத்த பெருமை கொண்ட கடலூர் துறைமுகம், ஆட்சியாளர்கள் கவனிக்காததால் வெறும் காட்சிக்கூடமாக மாறிவரும் அவலநிலையில் உள்ளது.
கடந்த 18-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்டது கடலூர் துறைமுகம். ராபர்ட் கிளைவ் காலத்தில், கிழக்கிந்திய கம்பெனி மூலம் ஏற்றுமதி, இறக்குமதி வாணிபம் பெரிய அளவில் நடைபெற்று வந்தது. இதன் காரணமாக ஆங்கிலேயர்களின் முதல் தலைநகரமாக விளங்கியது கடலூர்.
சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்படுவதற்கு முன் கடலூரில் புனித டேவிட் கோட்டையைக் கட்டி, தங்கள் வாணிபத்தை ஆங்கிலேயர்கள் தொடங்கினர். பரங்கிப்பேட்டையில் இருந்த இரும்பு உருக்கு ஆலைகளில் தயாரிக்கப்பட்ட இரும்புத் தளவாடங்கள் (ம்ஹக்ங் ண்ய் டர்ழ்ற்ர்-சர்ஸ்ர் என்ற முத்திரையுடன்), கடலூர் துறைமுகத்தில் இருந்து கப்பல்கள் மூலம் இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்டன.
எல்லா தட்பவெப்ப நிலையிலும், இந்தத் துறைமுகத்தில் இறக்குமதி செய்யும் வசதி இருந்தது.சுதந்திரத்துக்குப் பின் கடலூர் துறைமுகத்தில் இருந்து, சேலத்தில் வெட்டி எடுக்கப்பட்ட இரும்புக் கனிமங்கள், வெங்காயம், வெல்லம், சர்க்கரை, வெள்ளைக் கற்கள் போன்றவை கப்பல்கள் மூலம் சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. யூரியா, கோதுமை போன்ற பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன.
கடந்த 1960-ஆம் ஆண்டுவாக்கில், ஒரே நேரத்தில் 16 கப்பல்கள் மூலம் ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் மிகவும் பரபரப்பாக செயல்பட்டு வந்தது.
1985 வரை 150 ஊழியர்களுடன் இத்துறைமுக அலுவலகம் செயல்பட்டது. 500 சரக்கு விசைப் படகுகளுடன், 1 லட்சம் தொழிலாளர்களுக்கும், இங்கு வேலைவாய்ப்பு இருந்தது. நாளடைவில் கப்பல் போக்குவரத்து குறைந்து வணிகம் மந்தமடைந்ததால், 1996-ஆம் ஆண்டில் இருந்து கப்பல் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.
தற்போது 7 ஊழியர்களுடன் இயங்கிக்கொண்டு இருக்கிறது துறைமுக அலுவலகம். இதனால் கடலூர், நாகைத் துறைமுகங்களுக்கு ஒரே அதிகாரி செயல்படுகிறார். வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் முகத்துவாரத்தில் படியும் மணலை வாருவதற்கு நிரந்தரமாக செயல்பட்டு வந்த மணல்வாரி இயந்திரம் (டிரட்ஜர்) தற்போது நிரந்தரமாக அகற்றப்பட்டுவிட்டது.
சுனாமி மறுவாழ்வுப் பணிகளில், முகத்துவாரத்தில் இருந்து மீன்பிடி படகுகள் நிறுத்தப்படும் உப்பனாறு வரை, சிறிதளவு மணல் அகற்றப்பட்டது.
ரூ.15 கோடியில் துறைமுகம் பகுதியில் அலைதாங்கி கற்கள் கொட்டப்பட்டன. எனினும் முகத்துவாரம் முழுமையாக தூர்வாரப்படவில்லை என்கிறார்கள் மீனவர்கள். ரயில் நிலையத்தில் இருந்து துறைமுகம் செல்லும் ரயில்பாதை கூட அகலப்பாதையாக மாற்றப்படாமல் சிதைந்து கிடக்கிறது.
பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படாததால், இப்போது கடலூர் துறைமுகத்துக்கு வரும் கப்பல்கள் 1.5 கடல் மைல் தொலைவில், கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்படுகின்றன.
துறைமுகச் செயல்பாடுகளுக்கு வசதியாக இந்தத் துறைமுகத்துக்கு 100 ஏக்கர் நிலங்கள் உள்ளன. ஆனால் நாகை, குளச்சல் துறைமுகங்களுக்கு போதிய நிலங்கள் இல்லை என்றும் துறைமுக அதிகாரிகள் கூறுகின்றனர்.
சென்னைக்கு மிக அருகில் இருப்பதால், சென்னை துறைமுகத்தில் இறக்கக்கூடிய சரக்குகளை கடலூரில் இறக்கி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் எளிதில் கொண்டு போக முடியும்.
இத்தனை வசதிகள் இருந்தும் கடலூர் துறைமுகம் விரிவாக்கம் செய்யப்படாமலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தாமலும் செயலிழந்து கிடக்கிறது.
கடலூரில் துறைமுகத்தை ஓட்டியப் பகுதிகளில் மீன்பிடித்தல், படகுகள் கட்டுதல், சிறிய வர்த்தகக் கப்பல்கள் கட்டுதல் உள்ளிட்ட பணிகளால் ஆண்டுக்கு ரூ.200 கோடி வர்த்தகம் நடக்கிறது.
மீன்பிடித் தொழிலுக்கு வசதியாகக்கூட கடலூர் துறைமுகம் விரிவுபடுத்தப்படவில்லை. "இந்த துறைமுகம் ரூ.1,000 கோடி செலவில் மேம்படுத்தப்படும், சென்னை துறைமுகத்துக்கு இணையாக இங்கு சரக்குகள் கையாள முனையம் ஏற்படுத்தப்படும். இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுவிட்டது, விரைவில் பணிகள் தொடங்கப்படும்' என்று கடந்த 2010-ஆம் ஆண்டில் அப்போதைய ஆட்சியாளர்கள் பல மேடைகளில் முழங்கினர்.
ஆனால் இந்த திட்டம் குறித்து எந்த அரசியல் கட்சியும் இப்போது வாய் திறப்பதில்லை. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் சென்னை துறைமுகத்தின் முக்கியத்துவம் குறைந்துவிடும் என்ற எண்ணத்தில், திட்டத்தை அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் முடக்கி விட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து கடலூர் துறைமுக அதிகாரி அன்பரசனிடம் கேட்டபோது, "கடலூர் துறைமுகம் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, கடல்சார் வாரியத்திடம் உள்ளது. தமிழக கிழக்குக் கடற்கரையோரம் துறைமுகங்களுடன் ஒப்பிடும்போது, கடலூர் துறைமுகம் நல்ல வசதி கொண்டது.
வசதி குறைந்த நாகை துறைமுகத்தில் ஓரளவு கப்பல் போக்குவரத்து நடைபெறுகிறது. ஆனால், இயற்கையாக அமைந்துள்ள கடலூர் துறைமுகத்தில் அதுவும் இல்லை. கடந்த மாதம் பர்மாவிலிருந்து 6,000 டன் மரம் இந்த துறைமுகத்தில் இறக்கப்பட்டது.
நடப்பு மாதத்திலும் இதுபோன்று இங்கு மரம் இறக்க தனியார் ஒருவரிடம் ஒப்பந்தம் பெறப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்கள் விரும்பினால் முடிந்தவரை சேவை அளிக்க தயாராக உள்ளோம். மேலும் தனியார் நிறுவனத்துடன் இணைந்து கடலூர் துறைமுகத்தை விரிவுபடுத்த அரசு திட்டுமிட்டு உள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரோஹித் சர்மா, விராட் கோலி வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!
வீட்டுக் குறிப்புகள்...

கன்னியாகுமரியில் விசில் ஊதியவாறு சைக்கிள் ஓட்டிய விஜய்!

வங்கியில் வேலை வேண்டுமா..? - உடனே விண்ணப்பிக்கவும்!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

