திருத்தணியில் ஒரு நாள் மழைக்கே குடியிருப்புப் பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.
திருத்தணி நகரில் உள்ள ம.பொ.சி. சாலை, அரக்கோணம் சாலை, பழைய பஜார் சாலை, 2-வது ரயில்வே கேட் சாலை, காந்தி சாலை ஆகியவை முக்கிய சாலைகள் ஆகும்.
இப்பகுதிகளில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை காலை வரை திருத்தணியில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
இதனால் கழிவுநீர் கால்வாய்களில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக மழைநீருடன் கழிவுநீரும் சாலைகளில் தேங்கியது. இதனால் அப்பகுதிகளில் கடும் துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடும் நிலவுவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
மேலும் பழைய தர்மராஜாகோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. முறையான வடிநீர் கால்வாய்கள் இல்லாததால் மழைக்காலங்களில் இது போன்று குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்துவிடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். மேலும் இது குறித்து பல முறை புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர். எனவே இனி வரும் காலங்களிலாவது முறையான வடிகால்வாய்களை அமைத்தும், கழிவுநீர் கால்வாய்களை முறையாக பராமரித்தும் நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமராவதி-குழப்பம் தீர்ந்தது!

பட்டதாரிகள் வேலை இல்லாமல் தவிக்கின்றனா்: ஏசி. சண்முகம்

தேசிய வருவாய் திறனறிவுத் தோ்வில் மன்னாா்குடி மாணவா்கள் 2 போ் தோ்வு

பிறவி மருந்தீசா் கோயில் கருப்பன் வீதியுலா
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


