பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பாரதிராஜாவுக்கு என்னைப் பிடிக்கும்; என் நடிப்பு பிடிக்காது! ரஜினிகாந்த் பேட்டி

மறைந்த பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி...

News image

ரஜினி மற்றும் பாரதிராஜா - கோப்புப்படம்

Updated On :10 ஜூன் 2026, 3:11 pm IST

பாரதிராஜாவுக்கு என்னைப் பிடிக்கும், ஆனால் என் நடிப்பு பிடிக்காது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக்குறைவால் இன்று (ஜூன் 10) காலமானார். சென்னை நீலாங்கரை வீட்டில் வைக்கப்பட்டுள்ள பாரதிராஜாவின் உடலுக்கு திரையுலக, அரசியல் பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

அந்த வகையில் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பின்னர் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுடன் பேசுகையில்,

"திரையுலகில் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என பலரை அறிமுகப்படுத்தி திரையுலகத்தை வாழ வைத்தவர் பாரதிராஜா. திரையுலகில் யாருக்கு பிரச்னை என்றாலும் முதலில் குரல் கொடுத்தது பாரதிராஜாதான். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவரது படைப்புகளை யாரும் மறக்கமாட்டார்கள்.

தனிப்பட்ட முறையில் அவர் குழந்தை போன்றவர். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசியவர். என்னை அவருக்கு மிகவும் பிடிக்கும், ஆனால் என் நடிப்பைப் பிடிக்காது என வெளிப்படையாக கூறுவார். அவருடன் இருந்தாலே அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். அவரைப்போல வெளிப்படையாக பேசுபவர் யாருமே இருக்க முடியாது. அனைவரிடமும் அன்பு பாராட்டுபவர். என்றென்றும் அவர் என்னுடைய நினைவில் இருப்பார்" என்று பேசினார்.

Summary

Bharathiraja likes me, but he doesnt like my acting: Rajinikanth

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.