சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் இந்த ஆண்டு 7 ஆயிரத்து 750 வனவிலங்குகள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் அதிகளவில் குரங்குகள் மீட்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மொத்தம் 7 ஆயிரத்துக்கும் அதிகமான குரங்குகள், 639 பாம்புகள், 27 மான்கள், 3 மயில்கள், ஒரு முதலை உள்ளிட்ட உயிரினங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மான், மயில், கீரி, முதலை, மரநாய் உள்ளிட்ட வனவிலங்குகள் அவற்றின் வாழ்விடங்களில் இருந்து வழிதவறி சாலைகளுக்கு வந்து விடுகின்றன. அவ்வாறு சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் வழிதவறி வந்த வனவிலங்குகள் மற்றும் உயிரினங்களை வன உயிரின காப்பக அதிகாரிகள் மீட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்று விடுகின்றனர்.
அதன்படி, இந்த ஆண்டு பாம்புகள் மற்றும் குரங்குகள் அதிக அளவில் மீட்கப்பட்டன. இதைத் தவிர நெடுங்குன்றம் பகுதியில் வழிதவறி வந்த ஒரு முதலையும் மீட்கப்பட்டு அதன் வாழ்விடத்தில் திரும்ப விடப்பட்டது.
இதே போல நகரில் பாதுகாப்பின்றி சுற்றிக் கொண்டிருந்த மான், மயில், கீரி, கூழைக்கடா, குளத்தாமை, நட்சத்திர ஆமை, நீர்க் காகம் உள்ளிட்ட உயிரினங்களை வனக்காப்பாளர்கள் மீட்டுள்ளனர்.
அவற்றில் சில மான்கள் மற்றும் குரங்குகள் சாலை விபத்தில் சிக்கி காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டதாகவும், அவற்றுக்கு முதலுதவி அளித்து தொலைதூரக் காடுகளுக்கு கொண்டு சென்றுவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வன உயிரின காப்பக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்த ஆண்டு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வனவிலங்குகள் மற்றும் வன உயிரினங்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்று விடப்பட்டன. அவற்றில் 2,266 பாம்புகளும், 8,311 குரங்குகளும் அடங்கும்.
கடந்த ஆண்டில் ஒரு நரியும், எறும்பு தின்னியும் மீட்கப்பட்டு காட்டில் கொண்டு விடப்பட்டது. நகருக்குள் வழிதவறி வரும் வன உயிரினங்களை மீட்கவும், அவற்றுக்கு முதலுதவி அளிக்கவும் ஆம்புலன்ஸ் வசதியுடன் கூடிய வாகனம் பயன்படுத்தப்படுகிறது.
இந்த ஆண்டில் இதுவரை 7,750 வன உயிரினங்கள் மீட்கப்பட்டுள்ளன. சைதாப்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் அதிக அளவில் மான்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட விலங்குகள் அனைத்தும் 5 நாள்கள் கண்காணிப்புக்கு உள்படுத்தப்பட்டு அடர்ந்த காடுகளுக்குள் திரும்ப விடப்பட்டதாக தெரிவித்தார் அவர்.
இந்த ஆண்டு மீட்கப்பட்ட வன உயிரினங்களின் விவரம்:
குரங்கு 7001
பாம்பு 639
ஆந்தை 42
மான் 27
குளத்தாமை 8
நட்சத்திர ஆமை 4
மயில் 3
கீரி 2
கூழைக்கடா 2
நீர்க்காகம் 1
மரநாய் 1
முதலை 1
இவற்றைத் தவிர மைனா, வெளவால், கொக்கு, குயில், பருந்து, பச்சோந்தி, கிளி உள்ளிட்ட உயிரினங்களும் மீட்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மருத்துவமனையில் அனுமதி!
தமிழ்நாட்டை அடமானம் வைக்கும் இபிஎஸ்! மார்க்சிஸ்ட் செயலர் பெ. சண்முகம்
மே வெளியீடாக டிசி!
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

