விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

கூட்டுறவுச் சங்கங்களில் உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு

கூட்டுறவுச் சங்கங்களில் உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு வரும் 23-ம் தேதி முதல் மீண்டும் தொடங்குகிறது.

News image
Updated On :5 ஜனவரி 2013, 8:17 pm

தினமணி

கூட்டுறவுச் சங்கங்களில் உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு வரும் 23-ம் தேதி முதல் மீண்டும் தொடங்குகிறது. இதுகுறித்து, தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

பல்வேறு கூட்டுறவுச் சங்கங்களில் காலியாகவுள்ள 3 ஆயிரத்து 607 உதவியாளர் நிலையிலான பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் 9-ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெற்றது.

தேர்ச்சி பெற்ற தேர்வாளர்களுக்கு கடந்த மாதம் 28-ம் தேதி முதல் நேர்முகத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஒரு நாள் மட்டுமே தேர்வு நடத்தப்பட்டது.

பலத்த மழையினால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக, நேர்முகத் தேர்வு மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நேர்முகத் தேர்வு இப்போது ஜனவரி 23-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையில் அந்தந்த மாவட்டத்தில் உள்ள தலைநகரங்களில் நடைபெற உள்ளது. இதுதொடர்பான அழைப்புக் கடிதங்கள் சம்பந்தப்பட்டவர்களின் முகவரிக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும்.

தங்களுடைய தன் விவரக் குறிப்புகளை இதுவரை பதிவேற்றம் செய்யாத தேர்வர்கள் http://www.tncoopsrb.org/ என்ற இணையதளத்தில் உடனடியாக பதிவேற்றம் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பதிவேற்றம் செய்த விவரங்களை, இரு நகல்கள் எடுத்து அவற்றில் தங்கள் புகைப்படங்களை ஒட்டி, அவற்றுடன் நேர்முகத் தேர்வுக்குத் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் (அசல் மற்றும் இரு நகல்கள்) எடுத்து வருமாறு தெரிவிக்கப்படுகிறார்கள்.

மேலும், விவரங்கள் தேவைப்பட்டால் 044-24801034, 24801036 என்ற எண்களை தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.