வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

கருணாநிதியிடம் பிறந்த நாள் ஆசி பெற்றார் கனிமொழி

திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தனது பிறந்த நாளையொட்டி கட்சியின் தலைவரும், தந்தையுமான கருணாநிதியிடம் ஆசி பெற்றார்.

News image
Updated On :5 ஜனவரி 2013, 7:58 pm

தினமணி

திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தனது பிறந்த நாளையொட்டி கட்சியின் தலைவரும், தந்தையுமான கருணாநிதியிடம் ஆசி பெற்றார்.

கனிமொழி தனது 45-வது பிறந்த நாளை சென்னை சிஐடி காலனியில் உள்ள வீட்டில் சனிக்கிழமை கேக் வெட்டி கொண்டாடினார்.

கருணாநிதி, ராசாத்தி ஆகியோரிடம் அவர் வாழ்த்து பெற்றார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து கனிமொழிக்கு பூங்கொத்து கொடுத்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

மத்திய அமைச்சர்கள் பழநிமாணிக்கம், ஜெகத்ரட்சகன், துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, எஸ்.பி.சற்குணபாண்டியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆ.ராசா, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், பேராயர் எஸ்றா. சற்குணம் உள்பட ஏராளமானோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.