குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

"காடுவெட்டி குருவுக்கு எதிரான தேசிய பாதுகாப்புச் சட்டத்தைக் கைவிட வேண்டும்'

பாமக சட்டப்பேரவை உறுப்பினர் காடுவெட்டி குருவுக்கு எதிரான தேசிய பாதுகாப்புச் சட்டத்தைக் கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

News image
Updated On :13 மே 2013, 3:26 am IST

பாமக சட்டப்பேரவை உறுப்பினர் காடுவெட்டி குருவுக்கு எதிரான தேசிய பாதுகாப்புச் சட்டத்தைக் கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

பாமகவைச் சேர்ந்த குருவும் அவரது இயக்கத்தைச் சேர்ந்த தலைவர்களும் தலித் மக்கள் மீது தாக்குதல் தொடுப்பது, வன்முறையைத் தூண்டுவது, அரசியல் தலைவர்களைக் கொச்சைப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது தவறானது.

இந்த நடவடிக்கைகள் தமிழகத்தில் கலவரம் ஏற்படுத்தக் கூடியதுடன், மக்கள் ஒற்றுமையைச் சீர்குலைக்கக் கூடியதுமாகும்.

தமிழக மக்கள் இதற்கு ஒரு போதும் இரையாகிவிடக் கூடாது.

தமிழகத்தின் பொது அமைதியையும், மக்கள் ஒற்றுமையையும் பாதுகாக்க மாநில அரசு சட்ட வரம்புக்குட்பட்ட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அதேநேரத்தில் நீதிமன்ற விசாரணையின்றி தேசிய பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி யார் ஒருவரையும் கைது செய்து சிறையிலடைப்பது ஜனநாயக அணுகுமுறையா

காது.

தற்போது குருவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தியிருக்கும் தமிழக அரசின் நடவடிக்கை சரியான அணுகுமுறையாக இல்லை.

இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.