6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஸ்டவ் வெடித்து இளம்பெண் சாவு: சார் ஆட்சியர் விசாரணை

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே வியாழக்கிழமை இரவு ஸ்டவ் வெடித்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து, சார் ஆட்சியர்

News image
Updated On :8 ஆகஸ்ட் 2014, 1:50 pm

தர்மராஜ்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே வியாழக்கிழமை இரவு ஸ்டவ் வெடித்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து, சார் ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

வேப்பந்தட்டை அருகே உள்ள என்.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் மனைவி ரேவதி (23). இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி கெüதம் (4) என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், வியாழக்கிழமை இரவு  ரேவதி பால் காய்ச்சுவதற்காக மண்ணெண்ணை ஸ்டவ்வை பற்ற வைத்தபோது ஸ்டவ் வெடித்ததில் பலத்த காயமைந்த ரேவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து அவரது தாய் சரசு (42) அளித்த புகாரின்பேரில், மங்கலமேடு துணை கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார். மேலும், திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் வரதட்சிணை கொடுமையால் ரேவதி  தற்கொலை செய்து கொண்டாரா என பெரம்பலூர் சார் ஆட்சியர் ப. மதுசூதன் ரெட்டி விசாரிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.