நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

திமுக முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் அதிமுகவில் இணைந்தார்

பழனி நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் எஸ்கேகே.ஹக்கீம்.  இவர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்த பல வருடங்களான நிலையில் திமுக சார்பில் முன்னாள் நகர்மன்ற தலைவராக

News image
Updated On :25 ஆகஸ்ட் 2014, 1:16 pm

என்.​ அங்​கு​பாபு

பழனி முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் திமுகவில் இருந்து விலகி அமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

     பழனி நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் எஸ்கேகே.ஹக்கீம்.  இவர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்த பல வருடங்களான நிலையில் திமுக சார்பில் முன்னாள் நகர்மன்ற தலைவராக பணியாற்றியுள்ளார்.  மேலும், மாநில ஹஜ் கமிட்டி உறுப்பினராகவும், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.  இந்நிலையில் இவர் திமுகவில் இருந்து விலகி  தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விசுவநாதன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.  திங்கள்கிழமை பழனி சட்டமன்ற உறுப்பினர் வேணுகோபாலு மற்றும் பலரிடம் நேரில் சந்தித்து வாழ்த்தும் பெற்றார்.  இதுகுறித்து அவர் கூறுகையில், திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்த மட்டிலும் திமுகவில் கட்சிப்பணியாற்றிய ஏராளமானோர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  புதியதாக பதவி வழங்கவுள்ளோர் சரியாக பணி செய்வார்களா என தெரியவில்லை.  மேலும், மாவட்டத்தை பிரிப்பதிலும் சரியான முறை பின்பற்றப்படவில்லை.  ஆகவே, இந்த தருணத்தில் திமுகவில் இருப்பது சரியல்லை என்று எண்ணியதால் அதிமுகவான எனது தாய்க்கழகத்துக்கு வந்துவிட்டேன் என தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.