ஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

போலீஸ்காரர் மனைவியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

கீழக்குறிச்சி பெரியார் நகரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்.இவர் காந்தி சந்தை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெயசித்ரா. வெளியூர் சென்றிருந்த இவர்,

Updated On :11 டிசம்பர் 2014, 1:17 pm

திருச்சி பொன்மலை அருகே புதன்கிழமை நள்ளிரவு போலீஸ்காரர் மனைவியிடம் 5 பவுன் தாலி சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

கீழக்குறிச்சி பெரியார் நகரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்.இவர் காந்தி சந்தை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெயசித்ரா. வெளியூர் சென்றிருந்த இவர்,புதன்கிழமை நள்ளிரவு பொன்மலை ரயில் நிலையத்திலிருந்து தனது சகோதரர் உடன் இருசக்ககர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

பொன்மலை இருபாலர் மேல்நிலைப்பள்ளி அருகே சென்ற போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், ஜெயசித்ரா அணிந்திருந்த 10 பவுன் தாலி சங்கிலியை பறிக்க முயன்றனர். அப்போது ஜெயசித்ரா தனது தாலி சங்கிலியை இறுக்கி பிடித்து கொண்டதில் சங்கிலி பாதியாக அறுந்தது. அதனை அந்த மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். இது குறித்து பொன்மலை போலீஸார் வழக்குப் பதிந்து  விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.