விருதுநகர் மாவட்டத்தில் கண்மாய், அணைகள் மற்றும் விளைநிலங்களில் இடையூராக உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி தலைமை வகித்தார். வேளாண்மை இணை இயக்குநர் சுப்பையா முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் இடையே நடந்த விவாதம் வருமாறு:
ராமச்சந்திரராஜா(மா விவசாயிகள் சங்க தலைவர்): இம் மாவட்டத்தில் விதை விற்பனை நிலையங்களில் அதிக மகசூல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வீரிய ஒட்டு ரக விதைகளை வாங்கி விதைப்பு பணிகளை மேற்கொள்கின்றனர். ஆனால், போதுமான சாகுபடி கிடைக்காமல் விவசாயிகள் நஷ்டமடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதை விதை ஆய்வுத்துறையினர் ஆய்வு செய்து தரமான விதைகள் கிடைக்கச் செய்ய வேண்டும். இன்னும் இரண்டு வாரங்களில் நெல், மக்காச்சோள அறுவடை மேற்கொள்ளப்பட இருக்கிறது. குறிப்பிட்ட பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்றார்.
விஜயமுருகன்(தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர்): சூரிய ஒளி மின்சாரம் மூலம் இயங்கும் பம்ப்செட் மானியத்தில் வழங்கும் திட்டம் வேளாண்மை துறை மூலம் அறிவிக்கப்பட்டு அதன் இயக்கத்தை அறிந்து கொள்ளும் நேரில் பார்வையிட்டும் வந்தனர். அதன் அடிப்படையில் 70 பேர் வாங்குவதற்கு முடிவு செய்து முன்பணமாக ரூ.1.16 லட்சம் செலுத்தியிருந்தனர். ஆனால் ஒப்பந்தம் பெற்ற நிறுவனத்தினர் திட்ட மதிப்பீடு உயர்ந்துள்ளதாக கூறி மறுக்கின்றனர். நீர் நிலைகளான கண்மாய், அணைகள் மற்றும் விளைநிலங்களில் நீரை உறிஞ்சும் தன்மையுடைய சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ராஜகோபால்(சாத்தூர் விவசாயி): சாத்தூர் பகுதியில் பம்ப்செட் கிணற்றுப்பாசனம் மூலம் வெங்காய விதைப்பு பணிகள் நடைபெறுகிறது. இப்பகுதியில் விதை வெங்காயத்தை தனியார் வியாபாரிகள் கூடுதலாக விற்கிறார்கள். அதனால் தோட்டக்கலைத்துறை மூலம் விதை வெங்காயம் விவசாயிகளுக்கு வழங்கவும், வெம்பக்கோட்டை அணையை மராமத்து பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருப்பதால் தேங்கும் தண்ணீரும் விவசாயத்திற்கு பயன்படாத நிலையேற்பட்டுள்ளதால் தூர்வார வேண்டும் என்றார். இக்கூட்டத்தில் பல விவசாயிகள் கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி பதிலளித்து பேசுகையில், வீரிய ரக ஓட்டு விதைகளை விற்பனை செய்யும் கடைகளில் விதை ஆய்வுத்துறையினர் ஆய்வு செய்து தரமான விதைகள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதேபோல், மாவட்டத்தில் 4 இடங்களில் நெல் கொள்முதல் நிலையமும், கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலம் மக்காச்சோளம் கொள்முதல் நிலையமும் அமைக்கப்படும். விவசாயிகளுக்கு சூரிய ஒளி மூலம் இயங்கும் பம்ப்செட்கள் மானியத்தில் வழங்காததது குறித்து விசாரணை செய்யப்படும். கண்மாய்கள், அணைக்கட்டுக்கள் மற்றும் விளைநிலங்களை ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்கள் அனைத்தையும் விவசாயிகளின் பங்களிப்புடன் விரைவில் அகற்றப்படும். விதை வெங்காயம் தேவைப்படும் விவசாயிகள் தோட்டக்கலைத்துறையை அணுகி பெற்றுக்கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் சிவகாசி சார் ஆட்சியர் அமர்குஷ்வாஹா, அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் சுபாநந்தினி உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு!
தமிழகம் வரும் ராகுல்! 3 மாவட்டங்களில் இன்று பிரசாரம்!

பொன்னேரி, அண்ணாநகரில் விஜய் இன்று பிரசாரம்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


