இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

தமிழில் தோன்றிய இலக்கண நூல் தொல்காப்பியம்

தமிழில் தோன்றிய இலக்கண நூல் தொல்காப்பியம் என்று, தமிழறிஞர் ச.வே. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Updated On :30 ஜனவரி 2014, 12:28 am IST

தமிழில் தோன்றிய இலக்கண நூல் தொல்காப்பியம் என்று, தமிழறிஞர் ச.வே. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மதுரை பாத்திமா கல்லூரியில், சங்கத் தமிழில் முத்தமிழ் என்ற தலைப்பில் 3 நாள் கருத்தரங்கத் துவக்க விழா புதன்கிழமை கல்லூரி பொன்விழா அரங்கில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அருட்சகோதரி ஜோஸ்பின் நிர்மலாமேரி வாழ்த்திப் பேசினார்.

விழாவுக்கு தலைமை வகித்து, உலகத் தமிழ் கல்வி இயக்ககம் மதிப்புறு இயக்குநரும், தமிழறிஞருமான ச.வே. சுப்பிரமணியன் பேசியது:

சங்க இலக்கியம் உலகின் இமயம். வடமாநில இலக்கண நூல் ஆங்கில மொழியிலும், பெங்காலி நாட்டு இலக்கண நூல் போர்ச்சுகீசிய மொழியிலும் எழுதப்பட்டன. ஆனால், தமிழில் தோன்றிய இலக்கண நூல் தொல்காப்பியம், தமிழிலேயே எழுதப்பட்டது.

இதன் ஆண்டு கி.மு. 5320. தமிழில் 13,691 தொடை இலக்கணங்கள் உள்ளன. தமிழின் வயது 40 ஆயிரம் ஆகும்.

தொல்காப்பியத்தில் சங்கம், இலக்கியம் ஆகிய சொற்கள் இல்லை. இலக்கியம் என்ற சொல் சூடாமணியிலேயே முதலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஓரின உயிரான புன்னை மரத்தையும், உடன் பிறந்தவளாகக் கருதும் பண்பாட்டுச் சிறப்பு தமிழுக்கு உரியது.

திருக்குறளில் குறிப்பிடப்பட்டுள்ள அறம், பொருள், இன்பம் ஆகியவற்றில் எல்லாமே அடங்கியுள்ளன. அறம் என்றால் மனம், பொருள் என்றால் உள்ளம், இன்பம் என்றால் நெஞ்சமாகும். அறத்துக்கு மனம் தேவை. அன்புக்கு இதயம் கண்டிப்பாக தேவை. பரிபாடலில் திருமால், முருகன் பற்றிய பாடல்கள் இசைநயத்துடன் இயற்றப்பட்டுள்ளன என்றார்.

புலவர் ரா. இளங்குமரனார் மெயக்கருத்துரை வழங்கினார். முன்னதாக, கல்லூரி தமிழ் துறைத் தலைவர் நா. அனுராதா வரவேற்றுப் பேசினார். இணைப் பேராசிரியர் மு. கமலா நன்றி கூறினார்.

பின்னர் துவங்கிய முதல் நிகழ்வில், சங்கத் தமிழ் இயற்றமிழ் கட்டுரை வாசிப்பு நடைபெற்றது. குறுந்தொகையில் நோக்கு எனற தலைப்பில் ரா. மோகன், சங்கப் பாடல்களில் பொருட்கூறுகளும், கட்டமைப்பும் என்ற தலைப்பில் மு. மணிவேல் பேசினர்.

இரண்டாம் நிகழ்வில், சங்க இலக்கியத்தில் இயற்றமிழ் கூறுகள் என்ற தலைப்பிலும், அறம் நோக்கில் தொல்காப்பிய வரையறைகளும் சங்க இலக்கியப் பதிவுகளும் என்ற தலைப்பிலும், பத்துப்பாட்டில் கருத்தும் வடிவமும் என்ற தலைப்பில் அ. ஆலிஸ், சங்கப் பாடல்களில் பாட்டும் கூத்தும் என்ற தலைப்பில் கே.ஏ. குணசேகரன் ஆகியோர் பேசினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.