14 கிராமங்களை குண்டு வைத்து தகர்க்கப்போவதாக ஊராட்சி மன்றத் தலைவருக்கு மிரட்டல் கடிதம்

நாடாளுமன்றத் தேர்தலின்போது பொதுமக்களிடம் லஞ்சமாக கொடுத்த பணத்தை திரும்ப வசூல் செய்யாவிட்டால் 14 கிராமங்களை குண்டு வைத்து தகர்க்கப்போவதாக
Updated on
1 min read

நாடாளுமன்றத் தேர்தலின்போது பொதுமக்களிடம் லஞ்சமாக கொடுத்த பணத்தை திரும்ப வசூல் செய்யாவிட்டால் 14 கிராமங்களை குண்டு வைத்து தகர்க்கப்போவதாக வானூர் ஊராட்சி மன்றத் தலைவருக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.

 வானூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் காஞ்சனா ராஜு. இவருக்கு அருகில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் அனுப்பியதுபோல் தபாலில் ஒரு கடிதம் வந்தது. பஞ்சாயத்து தலைவர், வானூர் பஞ்சாயத்து அலுவலகம், வானூர் அஞ்சல், விழுப்புரம் மாவட்டம் என்ற முகவரிக்கு அக் கடிதம் அனுப்பப்பட்டுóள்ளது. இக் கடிதத்தை திண்டிவனத்துக்குச் சென்று அங்கிருந்து அனுப்பியுள்ளனர்.

 கடந்த நாடாளுமன்றத்தில் மக்களிடம் லஞ்சமாக கொடுக்கப்பட்ட பணத்தை திரும்ப வசூல் செய்ய வேண்டும். அதனை வனூர் சட்டமன்ற உறுப்பினர் மூலம சென்னைக்கு அனுப்ப வேண்டும் இல்லாவிட்டால் நயினார்பாளையம், புளிச்சப்பள்ளம், ஒட்டை, புதுப்பாக்கம், நாராயணபுரம், ரங்கநாதபுரம், சேமங்கலம், கூழ் கூத்தப்பாக்கம், எடப்பாளையம், திருவக்கரை, அம்புழுக்கை, நெமிலி, கடகம்பட்டு, பரங்கினி ஆகிய கிராமங்களில் குண்டு போட்டு ஊரே இல்லாமல் செய்துவிடுவோம். மேலும் அரசாங்கத்தில் லஞ்சம் வாங்கும் அனைத்து நபர்களையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. கடிதத்தில் பல அநாகரீகமான வார்த்தைகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

 இது குறித்து வானூர் ஊராட்சி மன்றத் தலைவர் காஞ்சனா வானூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக வானூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com