6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மகளை பலாத்காரம் செய்ய முயன்ற தந்தை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே மகளை பலாத்காரம் செய்ய முயன்ற தந்தையை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது

News image
Updated On :11 ஜூலை 2014, 1:54 pm

தர்மராஜ்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே மகளை பலாத்காரம் செய்ய முயன்ற தந்தையை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.

 ஆலத்தூர் ஒன்றிய்ததில் உள்ள தேனூர் கல்லாங்குத்து தெருவை சேர்ந்தவர் ராஜகோபால் (42). பெரம்பலூரில் உள்ள தனியார் பேருந்தில் ஓட்டுநராக இருந்த ராஜகோபால், அவரது 15 வயதுள்ள மகளிடம் இரவு நேரங்களில் தகாத செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 23ம் தேதி இரவு போதையில் வீட்டிற்கு சென்ற ராஜகோபால், தூங்கிகொண்டிருந்த அவரது மகளை பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ஜோஸியா ராஜன் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூர் மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ரஞ்சனா வழக்குப் பதிந்து ராஜகோபாலை கைது செய்து, பெரம்பலூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராஜகோபால், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், ராஜகோபாலை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்த்ரா பரிந்துரை செய்ததன் அடிப்படையில், அவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.