கார்பைட் கற்கள் மூலம் மாம்பழத்தை பழுக்க வைத்தால் சிறை தண்டனை
புதுவை, காரைக்காலில் கார்பைட் கற்கள் மூலம் மாம்பழத்தை பழுக்க வைப்போருக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என உணவு பாதுகாப்பு ஆணையர் ராகேஷ் சந்திரா


புதுவை, காரைக்காலில் கார்பைட் கற்கள் மூலம் மாம்பழத்தை பழுக்க வைப்போருக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என உணவு பாதுகாப்பு ஆணையர் ராகேஷ் சந்திரா எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
புதுவை, காரைக்காலில் கார்பைட் கற்கள் மூலம் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் விற்பதாக பல புகார்கள் வருகிறது. கடந்த மே மாதத்தில் சுமார் 3 டன் மாம்பழங்களும், காரைககாலில் ஜூனில் 1.5 டன் மாம்பழங்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.
கார்பைட்டால் பழுக்க வைக்கப்பட்ட பழங்களால் பல பாதிப்புகள் ஏற்படும். தரம் குறைவாக இருக்கும். மேற்புறத்தோல் சீராக ஒரே மாதிரியான வண்ணத்தில் இருக்காது.
வயிறு அஜீரணம், வாந்தி, பேதி, நெஞ்சு, வயிற்று எரிச்சல், விழுங்குவதில் சிரமம், நிரந்தரமான கண் பாதிப்பு, தொண்டை புண், இருமல், மூச்சுத்திணறல் ஏற்படும்.
இயற்கையாக பழுத்த மாம்பழங்கள் நல்ல மணமும், தோற்றமும் கொண்டிருக்கும்.மேலும் தோலைப்பொறுத்த மட்டில் ஓரே சீராக இல்லாமல் மஞ்சளும், பச்சை நிறமும் கலந்திருக்கும்.
மாம்பழத்தை உண்ணும் முன்பு நல்ல தண்ணீரில் 30 நிமிடம் ஊறவைத்து கழுவி விட்டு சாப்பிட வேண்டும். உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் மற்றும் கட்டுப்பாடு சட்டப்படி கார்பைட் மூலம் மாம்பழத்தை பழுக்க வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இச்சட்டப்படி ரூ. 5 லட்சம் அபராதமும், ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்க வழியுண்டு.
மாம்பழங்களை கார்பைட் கற்கள் மூலம் பழுக்க வைப்பதை உணவு பாதுகாப்புத்துறை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இது தண்டனைக்குரிய குற்றம். எத்தியான் ரசாயன மருந்தை கொண்டு பழத்தை பழுக்க வைக்கலாம். எனினும் இப்பழங்களையும் தண்ணீரில் கழுவிய பின்னரே உண்ண வேண்டும் என்றார் ராகேஷ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...