நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சம்ஸ்கிருத வாரம் கொண்டாட்ட ஆணையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

சம்ஸ்கிருத வாரத்தை கொண்டாட வேண்டும் என்ற மத்திய அரசின் ஆணையைக் கண்டித்து சிபிஎஸ்இ எதிர்ப்பு போராட்டக் குழு சார்பில் புதுச்சேரியில் திங்கள்கிழமை

News image
Updated On :28 ஜூலை 2014, 9:16 am

சுஜித்குமார்

சம்ஸ்கிருத வாரத்தை கொண்டாட வேண்டும் என்ற மத்திய அரசின் ஆணையைக் கண்டித்து சிபிஎஸ்இ எதிர்ப்பு போராட்டக் குழு சார்பில் புதுச்சேரியில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்தி அரசு அலுவலகங்கள், சிபிஎஸ்இ பள்ளிகளில் ஆகஸ்ட் மாதம் சம்ஸ்கிருத வாரத்தைக் கொண்டாட வேண்டும் என அண்மையில் மத்திய அரசு ஆணையிட்டது.

இதற்கு தமிழகம் உள்பட பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதைக் கண்டித்து புதுவை யூனியன் பிரதேசத்திலும் பல்வேறு அமைப்புகள், கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக சிபிஎஸ்இ போராட்டக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குழு அமைப்பாளர் சு.பாவாணன் தலைமை தாங்கினார். தோழமை அமைப்பு நிர்வாகிகள் இரா.அழகிரி, மங்கையர்செல்வம், ரா.ராசகேரன், முகமது ரபீக், சிவ.இளங்கோ, சக்திவேல், சாமிநாதன், கோ.அழகிரி, முருகானந்தம், அஷ்ரப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.