நீர்பிடிப்பு பகுதியில் மிதமான மழை: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்வு
மேற்குத் தொடர்ச்சி மலையில் மிதமான மழை பெய்து வருவதை அடுத்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை பாபநாசம் அணையின் நீர்வரத்து


மேற்குத் தொடர்ச்சி மலையில் மிதமான மழை பெய்து வருவதை அடுத்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை பாபநாசம் அணையின் நீர்வரத்து விநாடிக்கு 857.64 கனஅடியாக அதிகரித்ததை தொடர்ந்து நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது.
தாமிரவருணி பாசனத்தில் கார் பருவ சாகுபடி பணிகளை தொடங்க வேண்டிய பருவத்தில் அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாததால் பாசனத்திற்கு இன்னமும் தண்ணீர் திறக்கவில்லை. கார் பருவ சாகுபடி பணிகளை தொடங்க அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க தாமதம் ஏற்படுவதால் சாகுபடியும் தாமதம் ஆகும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளது.
இதனிடையே மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் மிதமான மழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் 2 மி.மீ மழையும், சேர்வலாறு அணையில் 1 மி.மீ மழையும், குண்டாறு அணையில் 4 மி.மீ மழையும், அடவிநயினார் அணையில் 7 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் மிதமான மழை நீடிப்பபதால் அணைகளின் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் நீர்வரத்து குறைந்து காணப்பட்ட பாபநாசம் அணைக்கு வியாழக்கிழமை விநாடிக்கு 857.64 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நீர்மட்டம் உயர்வு: பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 49.30 அடியாக இருந்தது. குடிநீருக்காக அணையில் இருந்து 204.75 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 63.16 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 65.94 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 53.30 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 60.25 அடியாகவும் இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...