தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

பள்ளி மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சி: இளைஞர் கைது

 திருக்கோவிலூர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :23 ஜூன் 2014, 2:56 pm

ச.​ கார்த்​தி​கே​யன்

 திருக்கோவிலூர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

 திருக்கோவிலூரை அடுத்த கச்சிக்குச்சான் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி மீனா(13) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர், அதேப் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணியளவில் மாணவி மீனா வீட்டில் இருந்து வெளியில் வந்துள்ளார்.

 அப்போது அங்கு பதுங்கியிருந்த அதேப் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன்(21), மயக்க மருந்து கலந்த துணியை மாணவியின் முகத்தில் வைத்து மயக்கமடையச் செய்து பின்னர் கடத்தி சென்றதாகக் கூறப்படுகிறது.

 திருக்கோவிலூரில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து அங்கு அவருக்கு பாலியல் தொந்தரவு செய்ததாகவும் கூறப்படுகின்றது. இதுபற்றி அங்கிருந்து தப்பி விட்ட மாணவி மீனா தனது பெற்றோரிடம் கூறினாராம். இதைத் தொடர்ந்து மாணவியின் தந்தை திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 அதன்பேரில் வழக்குப் பதிவு செய்து மாணவியை கடத்தி, பாலியல் தொந்தரவு செய்த இளைஞர் ஜெகநாதனை ஞாயிற்றுக்கிழமை மாலை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.