காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சொத்துக் குவிப்பு வழக்கு: எ.வ.வேலு நீதிமன்றத்தில் ஆஜர்

வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்காக, செவ்வாய்க்கிழமை முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை

News image
Updated On :24 ஜூன் 2014, 1:30 pm

சரவண பெருமாள்

வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்காக, செவ்வாய்க்கிழமை முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை மாவட்ட திமுக செயலாளருமான எ.வ.வேலு நீதிமன்றத்தில் ஆஜாரானார்.

திமுக ஆட்சியின்போது, தண்டராம்பட்டு சட்டசபைத் தொகுதியில் வெற்றி பெற்ற எ.வ.வேலு, தமிழக உணவுத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். இவரது பதவிக் காலத்தில் வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்து சேர்த்ததாக 2013 ஜனவரியில் வேலூர் லஞ்ச ஒழிப்புப் போலீஸôர் வழக்குப் பதிவு செய்தனர்.

தொடர்ந்து, இவருக்குச் சொந்தமான வீடு மற்றும் கல்வி நிறுவனங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. இது தொடர்பான வழக்கு திருவண்ணாமலை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) இவ் வழக்கின் விசாரணைக்காக எ.வ.வேலு நீதிமன்றத்தில் ஆஜரானார். ஆனால், அவரது மனைவி ஜீவா வேலு ஆஜராகவில்லை. வழக்கை விசாரித்த நீதிபதி குருமூர்த்தி அடுத்த கட்ட விசாரணையை ஜூலை 8-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.