அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

விருதுநகர் மாவட்டத்தில் குரூப்-2 தேர்வில் 20,863 பேர்  தேர்வு எழுதுகிறார்கள்

: விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்படும் குரூப்-2 தேர்வில் 20,863 பேர் பங்கேற்று தேர்வு எழுத இருப்பதாகவும்,

Updated On :28 ஜூன் 2014, 1:40 pm

: விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்படும் குரூப்-2 தேர்வில் 20,863 பேர் பங்கேற்று தேர்வு எழுத இருப்பதாகவும், அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்தார்.

    இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 தேர்வு (ஞாயிற்றுக்கிழமை) இன்று நடைபெற இருக்கிறது. இம்மாவட்டத்திலிருந்து இத்தேர்வு எழுதுவதற்காக 20863 பேர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்காக விருதுநகர், அருப்புக்கோட்டை, ராஜபாளையம், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய பகுதிகளில் 43 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    மேலும், தேர்வு மையங்களில் அனைத்து வசதிகளும் செய்து கொடுப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தேர்வு மையங்களுக்கு வந்து செல்லும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் நகர பேருந்துகள் இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதேபோல், மாற்றுத்திறனாளி மற்றும் பார்வையற்றோர்கள் எளிதாக செல்லும் வகையில் தேர்வு மையங்களில் கீழ்தளத்தில் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

     இதில், தேர்வு அறைகளில் முறைகேடுகளை தடுக்கும் வகையிலும், கண்காணிக்கவும் கண்காணிப்பாளர்கள் மற்றும் பறக்கும் படை அலுவலர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், அறைகளில் நடக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் வீடியோவில் பதிவு செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு  இருப்பதாகவும் ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்தார்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.