மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

காலாண்டுத் தேர்வை தொடர்ச்சியாக நடத்த கோரிக்கை

விருதுநகர் மாவட்டத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் நலன் கருதி செப்டம்பர் மாதம் நடைபெறும் காலாண்டு தேர்வை தொடர்ச்சியாக நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி

News image
Updated On :15 செப்டம்பர் 2014, 11:59 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் நலன் கருதி செப்டம்பர் மாதம் நடைபெறும் காலாண்டு தேர்வை தொடர்ச்சியாக நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் விருதுநகர் மாவட்டத் தலைவர் வெ.வீரபாண்டியராஜ் ஸ்ரீவில்லிபுத்தூரில் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

விருதுநகர் மாவட்டத்தில் காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 15-ம் தேதியிலிருந்து 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. தற்போது செப்டம்பர் 17 மற்றும் 18 தேதிகளில் நடைபெறுவதாக இருந்த 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான மொழித்தாள் தேர்வுகள், காலாண்டு விடுமுறைக்குப் பின் அக்டோபர் 7 மற்றும் 8-ம் தேதிகளில் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனால் மாணவர்கள் தொடர்ச்சியாக தேர்வுகள் எழுத முடியாமல், அவர்களுடைய கவனம் சிதறம். மேலும் விடுமுறை நாட்களில் மற்ற பாடங்களைப் படிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்துவிடும். மேலும் மொழித்தாளை அனைத்துப் பிரிவு மாணவர்களும் தேர்வு எழுதுவதால், விடைத்தாள் திருத்துவதில் ஆசிரியர்களுக்கு சிரமமும், தாமதமும் ஏற்படும். எனவே மொழித் தேர்வு விடுமுறைக்கு முன் செப்டம்பர் 20 மற்றும் 27 ஆகிய சனிக்கிழமைகளில் நடத்தினால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நலமாக இருக்கும்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இது விஷயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வீரபாண்டியராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.