தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘தொட்டியம் இ.எம்.சரவணன் (திருச்சி வடக்கு), ஏ.வி.எஸ்.இளங்கோவன் (தருமபுரி), ஜி.ஜெயபிரகாஷ் (சேலம் மாநகர்), எஸ்.கே.செல்வராஜ் (சேலம் கிழக்கு), பி.கோபால் (சேலம் மேற்கு), ஆர்.மதனகோபால் (பெரம்பலூர்) ஆகியோர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
அவர்களுக்குப் பதிலாக என்.ஜெயப்பிரகாஷ் (திருச்சி வடக்கு) கே.ராஜாராம் வர்மா (தருமபுரி), எஸ்.பி.மேகநாதன் (சேலம் மாநகர்), எம்.பெரியசாமி (சேலம் கிழக்கு), ஏ.என்.முருகன் (சேலம் மேற்கு), டி.தமிழ்செல்வன் (பெரம் பலூர்) ஆகியோர் மாவட்டத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று எஸ்.கே.செல்வராஜ் பி.கோபால் ஜி.ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் ஈ.வி.கே. எஸ். இளங்கோவன் அறிவிப்பு செல்லாது. எங்களை நீக்கும் அதிகாரம் அவருக்கு இல்லை.என கூறியுள்ளனர். மேலும் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தியின் அனுமதியின்றி தன்னிச்சையாக இளங்கோவன் அறிவித்துள்ளார்.
எனவே இந்த அறிவிப்பை ஏற்க முடியாது என கூறியுள்ளனர். நீக்கப்பட்ட 6 பேரும் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான கே.வீ.தங்கபாலுவின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தோ்தல் விதிமுறைகளை மீறியதாக மு. அப்பாவு மீது வழக்கு

பணகுடி, வள்ளியூா் பகுதியில் பா.ஜ.க. வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஒரு மணிநேரம் போதும்! சட்டத்திருத்தம் குறித்து அமித் ஷா

ராதாபுரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பு அறை கேமரா மூலம் கண்காணிப்பு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

