தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

லாரி மீது கார் மோதி கார் டிரைவர் பலி

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் வெள்ளிகிழமை இரவு நடைபெற்ற சாலை விபத்தில் முன்னால் சென்றுக் கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் காரை ஓட்டி வந்த ஆரம்பாக்கத்தை

Updated On :1 ஆகஸ்ட் 2015, 10:28 am

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் வெள்ளிகிழமை இரவு நடைபெற்ற சாலை விபத்தில் முன்னால் சென்றுக் கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் காரை ஓட்டி வந்த ஆரம்பாக்கத்தை சேர்ந்த சிவசங்கர்(31) சம்பவ இடத்திலேயே பலியானார்.

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தை சேர்ந்தவர் ராமசந்திரன் மகன் சிவசங்கர். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும் 2 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். இவர் ஆரம்பாக்கம் அருகே தனியார் தொழிற்சாலைக்காக கார் ஓட்டி வந்தார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை அலுவலக நேரம் முடிந்ததும் அதிகாரியை சென்னை பெரம்பூருக்கு அழைத்து சென்று விட்டு விட்டு நள்ளிரவு வீடு திரும்பியிருக்கிறார்.

இவர் வழியில் ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த சரவணன்(24) என்பவரை காரில் ஏற்றி வந்துக் கொண்டிருந்த போது ஆரம்பாக்கம் பகுதியில் பலத்த மழை பெய்துக் கொண்டிருந்தது. அப்போது ஆரம்பாக்கம் உயர்பாலத்தில் மழையின் காரணமாக முன்னால் லாரி சென்றுக் கொண்டிருந்தது தெரியாததால், லாரியின் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே  சிவசங்கர் பரிதாபமாக  உயிரிழந்தார். சரவணனுக்கு இதில காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து குறித்து அறிந்து ஆரம்பாக்கம் போலீஸார் சம்பவ இடம் விரைந்து சிவசங்கரின் உடலை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பினர். இந்த விபத்து குறித்து சிவசங்கரின் தம்பி வசந்த்குமார் அளித்த புகாரின் பேரில் ஆரம்பாக்கம் போலீஸôர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.