அப்துல்கலாம் பெயரில் விருது: தமிழக முதல்வருக்கு தமிழ்ச் சங்கம் பாராட்டு
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் பெயரில் விருது வழங்குவதாக அறிவித்த தமிழக முதல்வருக்கு, திருக்கோவிலூருக்கு தமிழ்ச் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.


மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் பெயரில் விருது வழங்குவதாக அறிவித்த தமிழக முதல்வருக்கு, திருக்கோவிலூருக்கு தமிழ்ச் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
இச்சங்கத் தலைவர் சிங்கார. உதியன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், சிறந்த இந்திய குடியரசுத் தலைவராகவும், ஆற்றல் மிக்க விண்வெளி வித்தகராகவும் திகழ்ந்து, மாணவர்கள், இளைஞர்களிடையே தன்னம்பிக்கை உணர்வை ஏற்படுத்தி சாதனை புரிந்து மறைந்த அப்துல்கலாம் பெயரில் விருது வழங்குவதாக சென்ற 31-ம் தேதி அறிவித்துள்ளார்.
முதல்வரின் இந்த அறிவிப்பில் விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல், மாணாக்கர் நலன் ஆகியவற்றுக்கு பாடுபட்டு வரும் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த விருது வழங்கப்படும் என்றும், இந்த விருதை பெறுபவர்களுக்கு 8 கிராம் தங்கத்தால் ஆன பதக்கம், ரூ.5 லட்சம் ரொக்கம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவை இந்தாண்டு முதல் வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு திருக்கோவிலூர் தமிழ்ச் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...