திருச்சுழி அருகே விளம்பர பலகையை அகற்றியவர்களை தட்டிக்கேட்ட தோட்ட காவலாளியை தாக்கிய 2 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருச்சுழி அருகே பண்ணைமூன்றடைப்பு கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணனின் மகன் கண்ணன்(25). இவர் இக்கிராமத்தின் ஊராட்சி தலைவரான உதயகுமார் தோட்டத்தில் தோட்ட காவலாளியாக இருந்து வருகிறார். இந்நிலையில், இத்தோட்டம் அருகே உள்ள தொட்டியாங்குளம் கண்மாய் கரையில் மது குறித்த தீமைகள் குறித்த விளம்பர வாசகம் அடங்கிய தட்டியை வைத்திருந்தாராம்.
இதை அப்பகுதியைச் சேர்ந்த சுரேஷ், சதீஸ்குமார் உள்ளிட்ட 10 பேர் சேர்ந்து புதன்கிழமை மாலையில் அகற்றினார்களாம். இதைப் பார்த்துக் கொண்டிருந்த தோட்ட காவலாளி கண்ணன் தட்டிக் கேட்டாராம். அதற்கு, அப்படித்தான் அகற்றுவோம் எனக்கூறி மேற்குறிப்பிட்ட இருவரும் கீழே தள்ளிவிட்டு பனைமர மட்டை மற்றும் கம்பாலும் தாக்கி காயப்படுத்தியுள்ளனர். அதோடு, உன்னையும், ஊராட்சி தலைவரையும் கொல்லாமல் விடமாட்டோம் என மிட்டியும் உள்ளனர்.
இது தொடர்பாக திருச்சுழி காவல் நிலையத்தில் கண்ணன் புகார் செய்தார். அதன் அடிப்படையில் சுரேஷ், சதீஷ்குமார் ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த பெண் கைது

தோ்தல் பிரசார சீா்திருத்தம் கோரும் சுயேச்சைகள்!

தொகுதி நிலவரம் - வேப்பனஅள்ளி! அதிமுக, திமுக வெற்றியை தீா்மானிக்கும் தவெக, நாதக!

பரமத்தி வேலூா் தொகுதி! மீண்டும் நேரடி போட்டியில் திமுக-அதிமுக!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

