விருதுநகர் அருகே வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்வதாக மனைவி புகாரின் பேரில் கணவர் உள்பட குடும்பத்தார் 9 பேர் மீது திங்கள்கிழமை வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
விருதுநகர் சூலக்கரை வ.உ.சி தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியத்தின் மகள் பாண்டிச்செல்வி(30). அதே பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமியின் மகன் விஜயமுனியப்பன்(35) என்பவருக்கும் இடையே கடந்த 2006ல் திருமணம் நடைபெற்றதாம். அப்போது, ரூ.20 ஆயிரம் ரொக்கம், 20 சவரன் நகை மற்றும் ரூ.2 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருள்கள் ஆகியவை வழங்கப்பட்டதாம். இவர்களுக்கு ஆண்குழந்தையும் உள்ளது.
இந்நிலையில், இவரது கணவர் திருமணம் ஆன நாளிலிருந்து எவ்வித வேலைக்கும் செல்லாமல் மது குடித்து வந்து தகராறு செய்வாராம். மேலும், சொந்தமாக கார் வாங்கப்போவதாக கூறி கூடுதலாக வரதட்சணையாக பணம், நகை கொண்டு வந்தால் வாழ முடியும் எனக் கேட்டு சித்ரவதை செய்துள்ளார். இதற்கு அவரது குடும்பத்தாரும் உடந்தையாக இருந்துள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த பாண்டிச்செல்வி விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கணவர் மற்றும் குடும்பத்தார் மீது புகார் செய்தார். அதன் அடிப்படையில் கணவர் விஜயமுனியப்பன், தந்தை வேலுச்சா்மி, தாயார் முனியம்மாள், சகோதரரி விஜயலட்சுமி-இளங்கோவன், தங்கை மோகனா- ஞாபகதுரை, தங்கை பாரதி-கனகவேல் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த பெண் கைது

தோ்தல் பிரசார சீா்திருத்தம் கோரும் சுயேச்சைகள்!

தொகுதி நிலவரம் - வேப்பனஅள்ளி! அதிமுக, திமுக வெற்றியை தீா்மானிக்கும் தவெக, நாதக!

பரமத்தி வேலூா் தொகுதி! மீண்டும் நேரடி போட்டியில் திமுக-அதிமுக!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

