விருதுநகர் மாவட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் செயல்பாடுகள் தொடர்பாக ஊராட்சி செயலார்களுக்கான ஆய்வு கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
ஊரக வளர்ச்சி துறை அரங்க வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு திட்ட அலுவலர் டாக்டர்.சுரேஷ் தலைமை வகித்து பேசுகையில், ஒவ்வொரு ஊராட்சிகளையும் சுகாதாரமாக்கும் வகையில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக 10 ஆயிரம் மக்கள் தொகைக்கு மேற்பட்ட நகரம் அருகே உள்ள கிராம ஊராட்சிகள், சுற்றுலாதலம், புனித வழிபாடு தலங்கள் உள்ள ஊராட்சிகள், பெரிய தொழிற்சாலைகள், பேருந்து நிலையம், ரயில் நிலையம் அருகே உள்ள கிராமங்கள், தேசிய நெடுஞ்சாலை மேல் அமைந்துள்ள ஊராட்சிகள் தேர்வு செய்து செயல்படுத்தப்படுகிறது.
இம்மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களில் தேர்வு செய்துள்ள ஊராட்சிகள் விவரம்: அதில், ராஜபாளையம் ஒன்றியத்தில் சொக்கநாதன்புத்தூர், தளவாய்புரம், கிருஷ்ணாபுரம், மேலபாட்டம்கரிசல்குளம், மேலகீழகுலராஜராமன், வடக்குதேவதானம், சம்சிகாபுரம், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஒன்றியத்தில் அச்சம்தவிழ்த்தான், அத்திக்குளம், செங்குளம், படிக்காசுவைததான்பட்டி, திருவண்ணாமலை, விழுப்பனூர், பிள்ளையார்நத்தம், வத்திராயிருப்பு ஒன்றியத்தில் மகராஜாபுரம், ராமசாமிபுரம், ரெங்கப்பன்நாயக்கன்பட்டி, சிவகாசி ஒன்றியத்தில் ஆனைக்குட்டம், ஆனையூர், அனுப்பங்குளம், காரிசேரி, பள்ளபட்டி, சாமிநத்தம், செங்கமலநாச்சியார்புரம், சித்துராஜாபுரம், வேண்டுராயபுரம், விஸ்வநத்தம், வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் ஆலங்குளம், ஏழாயிரம்பண்ணை, தாயில்பட்டி, வெம்பக்கோட்டை, சாத்தூர் ஒன்றியத்தில் சத்திரபட்டி, இருக்கன்குடி, படந்தால், வெங்கடாஜலபுரம், விருதுநகர் ஒன்றியத்தில் சத்திரப்பட்டி, கூரைக்குண்டு, பாவாலி, ரோசல்பட்டி, சிவஞானபுரம், வச்சக்காரப்பட்டி, அருப்புக்கோட்டை ஒன்றியத்தில் ஆத்திபட்டி, கஞ்சமநாயக்கன்பட்டி, குல்லூர்சந்தை, பாலவநத்தம், பாலையம்பட்டி, பந்தல்குடி, சூலக்கரை, காரியாபட்டி ஒன்றியத்தில் ஆவியூர், டி,கடமங்கலம், கல்குறிச்சி, கம்பிக்குடி, தோனுகால், திருச்சுழி ஒன்றியத்தில் கீழக்கண்டமங்கலம், மண்டபசாலை, திருச்சுழி, நரிக்குடி ஒன்றித்தில் நரிக்குடி, வீரசோழன் ஆகிய கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்படுகிறது.
இந்த ஊராட்சிகளில் கழிவு பொருள்களை சேகரித்து மக்கும், மக்காத குப்பையென தரம் பிரித்து பாதுகாப்பான முறையில் வெளியேற்ற தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஊராட்சிக்கும் தலா 75 குடும்பங்களுக்கு ஒரு தூய்மை தொண்டர் என்கிற அடிப்படையில் 766 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதனால் இத்திட்டத்தை வருவாய் ஈட்டும் வகையில் சிறப்பாக செயல்படுத்த செயலாளர்களை அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும், மக்ககும், ம்க்காத குப்பைகளை சேகரித்து வருவாய் ஈட்டுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து அதிகாரிகள் மூலம் செயல்முறை விளக்கமும் அளித்தனர். இதில், ஊராட்சிகளின் செயலாளர்கள், ஒன்றிய மேற்பார்வையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த பெண் கைது

தோ்தல் பிரசார சீா்திருத்தம் கோரும் சுயேச்சைகள்!

தொகுதி நிலவரம் - வேப்பனஅள்ளி! அதிமுக, திமுக வெற்றியை தீா்மானிக்கும் தவெக, நாதக!

பரமத்தி வேலூா் தொகுதி! மீண்டும் நேரடி போட்டியில் திமுக-அதிமுக!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

