டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

அரசு பேருந்துகளை ஆய்வு செய்ய தனிக்குழு விஜயகாந்த் வலியுறுத்தல்

அரசு பேருந்துகளை ஆய்வு செய்ய, தனிக்குழு அமைக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:25 am

அரவிந்தன்

அரசு பேருந்துகளை ஆய்வு செய்ய, தனிக்குழு அமைக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

 இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-

 அரசு பேருந்துகள் மோசமான நிலையில் இருக்கின்றன. ஆங்காங்கே பழுதாகி நிற்பதுடன், விபத்துக்குள்ளாகும் சம்பவங்களும் தொடர்ந்து நிகழ்கின்றன.

 போக்குவரத்து துறையின் அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் வற்புறுத்தலால், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஒவ்வோர் ஆண்டும் அரசு பேருந்துகளை உரிய முறையில் ஆய்வு செய்யாமல், அதில் உள்ள தவறுகளையும், பழுதுகளையும் சுட்டிக்காட்டாமல், சில நேரங்களில் பேருந்தைப் பார்க்காமலேயே பொதுமக்களின் போக்குவரத்துக்கு ஏற்றதென தகுதிச்சான்று வழங்குவதாக போக்குவரத்துத் தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகிóன்றனர்.

 பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் செல்லும், தனியார் பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்ய தமிழக அரசு தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அது போல, அரசு பேருந்துகளுக்கும் தனிக்குழுக்கள் அமைத்து, அக்குழுவின் பரிந்துரைக்குப் பிறகே, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பேருந்து தகுதிச்சான்று வழங்கவேண்டுமென தொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 இந்த நடைமுறையை கொண்டு வந்திருந்தால், ஓட்டுநர் இருக்கை சரியில்லாமல் சென்னை ஜெமினி மேம்பாலத்தில் பேருந்து கவிழ்ந்தது போன்ற விபத்துகளைத் தவிர்த்திருக்க முடியும். 

 பேருந்தின் முகப்பு விளக்கும், பின்புற சிவப்பு விளக்கும், இடவலம் பார்க்கும் கண்ணாடிகளும் சரியாக இருந்தாலே பெரும்பாலான பேருந்து விபத்துகளை தடுத்திருக்க முடியும்.  எனவே, அதிமுக அரசு பொதுமக்களின் உயிரோடு விளையாடாமல், பேருந்துகளை உடனுக்குடன் சரியான முறையில் பராமரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.