தோல்வியில் முடிந்தது என்.எல்.சி பேச்சு வார்த்தை: ஏமாற்றத்தில் தொழிலாளர்கள்
என்.எல்.சி தொழிலாளர்கள், தொழிற் சங்க நிர்வாகிகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. இது தொழிலாளர்கள் இடையே பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.


என்.எல்.சி தொழிலாளர்கள், தொழிற் சங்க நிர்வாகிகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. இது தொழிலாளர்கள் இடையே பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
என்.எல்.சி நிரந்தர தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த மாதம் ஜூலை 20-ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
25-வது நாளாகப் போராட்டம் நடைபெற்று வருகின்றது. ஆனால் இன்று நடத்திய பேச்சு வார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை.
ஏற்கெனவே அறிவித்தபடி நாளை முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்.
இதைத் தொடர்ந்து என்.எல்.சி நிர்வாகம், தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். வட்டம் 1 விருந்தினர் மாளிகையில் நடந்த பேச்சு வார்த்தையில் தொமுச அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். சுமார் 3 மணி நேரம் நடந்த பேச்சு வார்த்தையில் தொமுச செயலாளர் ராசவண்ணியன் கோரியதில் பேச்சு வார்த்தையில் தோல்வியடைந்துள்ளது.
இதில் நாங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் எதுவும் இல்லை மீண்டும் நாளைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளனர். வெளியில் உள்ள தொழிற்சங்க நிர்வாகிகளைக் கலந்து ஆலோசித்து பேச்சு வார்த்தையில் பங்கேற்பது குறித்து முடிவு செய்யப்படும். திட்டமிட்டபடி நாளை நடக்கவுள்ள காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று அவர் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...