தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

என்.எல்.சி. தொழிலாளர்கள் உண்ணாவிரதம் துவக்கம்

என்.எல்.சி. நிரந்தரத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தொடர்பாக நெய்வேலியில் வியாழக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து. திட்டமிட்டபடி இன்று வெள்ளிக்கிழமை உண்ணாவிரதம் போராட்டத்தை துவங்கியுள்ளனர்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2015, 5:38 am

சீனிவாசன்

என்.எல்.சி. நிரந்தரத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தொடர்பாக நெய்வேலியில் வியாழக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து. திட்டமிட்டபடி இன்று வெள்ளிக்கிழமை உண்ணாவிரதம் போராட்டத்தை துவங்கியுள்ளனர்.

 24 சதவீத ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. நிரந்தரத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டம் இன்று 25-வது நாளாகத் தொடர்கிறது.

 நிரந்தரத் தொழிலாளர்கள் மட்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், தொமுச தலைவர் திருமாவளவன் என்.எல்.சி. நிர்வாகத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டதால்,

 ஒப்பந்தத் தொழிலாளர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவர் என ஒப்பந்தத் தொழிற்சங்கக் கூட்டமைப்பினர் செவ்வாய்க்கிழமை அறிவித்தனர். மேலும், நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில், இன்று வெள்ளிக்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

 ஆனால், ஒப்பந்தத் தொழிலாளர்களில் 50 சதவீதம் பேர் புதன்கிழமை பணிக்குச் சென்றனர். வியாழக்கிழமை கூடுதலாக 10 சதவீதம் பேர் பணிக்குச் சென்றதாகத் தெரிகிறது. தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், நடைபெற்ற பல கட்டப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.

 இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை நெய்வேலி வட்டம் 1-ல் உள்ள நெய்வேலி இல்லத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், என்.எல்.சி. தலைவர் பி.சுரேந்திரமோகன், இயக்குநர்கள் ஆச்சார்யா, ராகேஷ்குமார், சுபீர்தாஸ், ராஜகோபால், பூபதி, அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமான தொமுச சார்பில் அதன் தலைவர் திருமாவளவன், பொதுச்செயலர் எஸ்.ராசவன்னியன், அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கத் தலைவர் அபு, செயலர் ராம.உதயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

3 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எதிர்பார்த்த முன்னேற்றமும் ஏற்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. மத்திய சுரங்கத் துறை அமைச்சகத்தை மேற்கோள்காட்டி நிர்வாகம் அதன் நிலையில் உறுதியாக உள்ளது.

இதையடுத்து நிரந்தரத் தொழிலாளர்கள் திட்டமிட்டபடி இன்று வெள்ளிக்கிழமை உண்ணாவிரதம் போராட்டத்தை துவங்கியுள்ளனர். போராட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமான தொமுச சார்பில் அதன் தலைவர் திருமாவளவன், பொதுச்செயலர் எஸ்.ராசவன்னியன், அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கத் தலைவர் அபு, செயலர் ராம.உதயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

போராட்டத்திற்கு ஆதரவாக தனியார் பேருந்துகள், ஆட்டோ, கார்கள் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதேபோன்று வணிகர்களும் கடையடைப்பு செய்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.