தொழிலாளர் பிரச்னை சுமூகமாகப் பேசி தீர்வு காண வேண்டும்: வைகோ
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி தொழிலாளர்கள் கடந்த சில நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி தொழிலாளர்கள் கடந்த சில நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இரண்டாவது நாளாகக் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்களை சந்தித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆதரவு அளித்துப் பேசினார்.
தொழிலாளர்கள் போராட்டத்தில் வைகோ பேசியது:
1,500 ஆண்டுக்கு 1,500 கோடி ரூபாய் ஈட்டும் என்.எல்.சி நிறுவனம் தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றாதது ஏன் என்று தெரியவில்லை. பொதுத்துறை நிறுவனத்தின் ரூ.48 ஆயிரம் கோடி விற்பனை செய்ய பா.ஜ.க அரசு திட்டமிட்டுள்ளது. இதேபோல் 44 தொழிலாளர் நலச்சட்டங்களை நீக்கவும் திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசு மத்தியில் ஆளும் பாஜக அரசு கார்போரெட் நிறுவன அரசாகச் செயல்படுகிறது. என்.எல்.சி தொழிலாளர் பிரச்னையை சுமூகமாக பேசித் தீர்வு காண வேண்டும். இதை முடிவுக்குக் கொண்டு வரும் பொறுப்பு மத்திய அரசிடமே உள்ளது தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் வகையில் மாநில அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்.
தொழிலாளர்கள் மேற்கொள்ளும் போராட்டத்துக்கு உறுதுணையாக இருப்போம். தொ.மு.ச தலைவர் பணிநீக்கம் செய்வதைத் திரும்பப்பெற வேண்டும். என்.எல்.சி நிர்வாகம் தொழிலாளர்களை அச்சுறுத்தும் முயற்சியைக் கைவிட வேண்டும் இவ்வாறு வைகோ பேசியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...