தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

நெய்வேலியில் வன்முறை: பேருந்துகள் மீது கல்வீச்சு

என்எல்சி நிர்வாகத்துக்கும், தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததை அடுத்து மர்ம நபர்கள் 2 அரசு பேருந்துகள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தி உள்ளனர்.

News image
Updated On :17 ஆகஸ்ட் 2015, 7:04 am

சீனிவாசன்

என்எல்சி நிர்வாகத்துக்கும், தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததை அடுத்து மர்ம நபர்கள் 2 அரசு பேருந்துகள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடிகள் முழுவதும் உடைந்து நொறுங்கியது.

24 சதவீத ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி நிரந்தரத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டம் 29ஆவது நாளாக இன்று திங்கள்கிழமை தொடர்ந்தது.

97 தொழிலாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை வெள்ளிக்கிழமை முதல் தொடங்கியுள்ளனர்.

 இதனிடையே, தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், நெய்வேலி இல்லத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. என்எல்சி தலைவர் பி.சுரேந்திரமோகன், இயக்குநர்கள் ஆச்சார்யா, ராகேஷ்குமார், சுபீர்தாஸ், ராஜகோபால், பூபதி, தொமுச சார்பில் தலைவர் திருமாவளவன், பொதுச் செயலர் எஸ்.ராசவன்னியன், அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கத் தலைவர் அபு, செயலர் ராம.உதயகுமார், பாரத் மஸ்தூர் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

 சுமார் 2 மணி 30 நிமிடங்கள் நடந்த பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை, தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற என்.எல்.சி. நிர்வாகம் முன்வரவில்லை. இதையடுத்து போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

என்.எல்.சி. நிறுவன நிரந்தரத் தொழிலாளர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜூலை 20ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டம் இன்று 29ஆவது நாளாக நீடித்தது வருகின்றது.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களில் இதுவரை சுமார் 10க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர். இவர்கள் நெய்வேலி என்எல்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால், விரக்தி அடைந்த மர்ம நபர் செங்கோட்டையில் இருந்து 45 பயணிகளுடன் புதுச்சேரி நோக்கி வந்த அரசு பேருந்து நெய்வேலி புதுகுப்பம் அருகே கல்வீச்சு தாக்குதல் நடத்தினர். இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி முழுவதும் நொறுங்கி சேதமடைந்தது.

இதேபோன்று 60 பயணிகளுடன் நெய்வேலியிலிருந்து மதுரை புறப்பட்ட அரசு பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்து நொறுங்கியது. இந்த தாக்குதல் சம்பவங்களில் பயணிகள், ஓட்டுநர் யாருக்கும் பாதிக்கப்படவில்லை.

நெய்வேலி வட்டம் 7-ல் உள்ள ஒரு வீட்டின் திருமண வீட்டின் முன்பு நிறுத்தப்பட்ட கார் கண்ணாடியை உடைக்க முயன்ற நபரை அங்கிருந்த பெண் மற்றும் ஆண்கள் தடுத்தனர். அவர்களை தாக்கி காயப்படுத்தி, கார் கண்ணாடியை உடைத்தார்.

இதுகுறித்து நெய்வேலி நகரிய காவல்நிலையத்தில் புகார் அளிக்க வந்தனர். இதையறிந்த தொழிற்சங்க நிர்வாகிகள் அவர்களிடமும் குடும்பத்தினரிடமும் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டுக்கொண்டதையடுத்து அவர்கள் புகார் அளிக்காமல் திரும்பியதாக தெரிகிறது.

இதையடுத்து கடலூர் மாவட்ட எஸ்.பி விஜயகுமார் நெய்வேலி நகரத்தில் முகாமிட்டுள்ளார். இவருடன் நெய்வேலி நகர் காவல்துறையினர், கோட்டாச்சியர் உள்ளிட்டோரும் முகாமிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.