நெய்வேலியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உருவ பொம்மை எரிப்பு
தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசிய தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு எதிர்ப்புத் தெரிவித்து,


தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசிய தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நெய்வேலி, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடியில் அதிமுகவினர், செவ்வாய்க்கிழமை அவரது உருவப்பொம்மைகளை எரித்து கண்டன கோஷமிட்டனர்.
நெய்வேலியில்....
நெய்வேலி நகர செயலர் கே.கோவிந்தராஜ் தலைமையில், அவைத் தலைவர் கே.வெற்றிவேல் முன்னிலையில், மாவட்ட பிரதிநிதிகள் ஆ.ராமலிங்கம், கஞ்சமலை, நகர பொருளர் செல்வராஜ், அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்க தலைவர் அபு, செயலர் ராம.உதயகுமார், பொருளர் தேவானந்தன், அலுவலக செயலர் அல்போன்ஸ், கிளை செயலர் செல்வராஜ், மகளிரணி நகர இணை செயலர் பத்மாசெல்வராஜ், அலமேலு ஆகியோர் வட்டம்19-ல், காமராஜ் சிலை அருகே கண்டன கோஷம் எழுப்பி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உருவ பொம்மையை எரித்தனர்.
குறிஞ்சிப்பாடியில்....
குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலர் ஆர்.கோவிந்தராஜ் தலைமையில், மாவட்ட வழக்குரைஞர் பிரிவு துணை தலைவர் சொரத்தூர் இரா.இராஜசேகர் முன்னிலையிóல், பேரூராட்சி தலைவர் முத்துலிங்கம், துணைத் தலைவர் ரஜினிகாந்த், மகளிரணி ஒன்றிய செயலர் செந்தாமரை, துணை செயலர் சிவராமலிங்கம், ஒன்றிய கவுன்சிலர்கள் கணேசன், சக்திவேல், பாஸ்கர், வார்டு கவுன்சிலர்கள் சுரேஷ்குமார், கணேசன், சிவமணி, சக்திவேல், ரகுபதி உள்ளிட்டோர் குறிஞ்சிப்பாடி பேருந்தி நிலையம் எதிரே ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உருவ பொம்மையை எரித்து கண்டன கோஷமிட்டனர்.
பண்ருட்டியில்......
நகர மன்றத் தலைவர் பி.பன்னீர்செல்வம் தலைமையில், அவைத் தலைவர் வி.ராஜதுரை முன்னிலையில், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ஏழுமலை, ரவிசந்திரன், எம்.ஜி.ஆர்.மன்ற செயலர் பாலு, கவுன்சிலர்கள் வடிவேல், கமலக்கண்ணன், கோவிந்தன், ராமதாஸ், முருகன் உள்ளிட்டோர் பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உருவ பொம்மையை எரித்து கண்டன கோஷமிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...