ஈரோடு கச்சேரி தெருவில் உள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு சொந்தமான வீடு முற்றுகையிட்டு அதிமுக.,வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் - பிரதமர் மோடி சந்திப்பு குறித்து அவதூறாக பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை கைது செய்ய வலியுறுத்தி ஆங்காங்கே போராட்டம் நடைபெற்ற வருகின்றது.
இந்நிலையில் ஈரோடு, கச்சேரி தெருவில் உள்ள இளங்கோவனுக்கு சொந்தமான வீட்டை முற்றுகையிட்டு அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எஸ்.பி சிபி சக்கரவர்த்தி தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவரது வீட்டை சுற்றியுள்ள 6 தெருக்களில் 100 மீட்டர் வரை இரும்பு தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் ரவி தலைமையில் அதிமுகவினர் 50-க்கும் மேற்பட்டவர்கள் அப்பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.