அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

விருதுநகரில் அனைத்து சங்கங்களின் சார்பில் நிர்வாக குழு கூட்டம்

அனைத்து சங்கங்களின் நடவடிக்கை குழுகூட்டம் தொழிலாளர் முன்னேற்ற சங்க அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்றது.

Updated On :23 ஆகஸ்ட் 2015, 2:41 pm

அனைத்து சங்கங்களின் நடவடிக்கை குழுகூட்டம் தொழிலாளர் முன்னேற்ற சங்க அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு ஐ.என்.டி.யு.சி மாவட்ட கவுன்சில் தலைவர் எஸ்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். ஏ.ஐ.டி.யு.சி சங்கத்தைச் சேர்ந்த சு.சமுத்திரம், ஆர்.ஜீவா, சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், தொழிலாளர் நலச்சட்டங்கள் மற்றும் தொழிற்சாலை சட்டங்களை முதலாளிக்கு ஆதரவாக திருத்தம் செய்யக் கூடாது. சாலை பாதுகாப்பு சட்டம்-2015ஐ ரத்து செய்ய வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதுடன் குறைந்தபட்ச சம்பளம் ரூ.15 ஆயிரமும், வயதான காலத்தில் மருத்துவவசதி, குறைந்தபட்ச பென்சன் ரூ.5 ஆயிரம் கிடைப்பதற்கு வழிவகை செய்தல் மற்றும் 12அம்ச கோரிக்கைககளை வலியுறுத்தி நடத்தப்பட இருக்கிற வேலை நிறுத்தப்போராட்டத்தில் அனைத்து தொழிலாளர்களும் பங்கேற்கவும் வேண்டும். இதை தொழிலாளர்களிடம் விளக்கி கூறும் வகையில் இம்மாவட்டத்தில் 11 மையங்களில் தெருமுனைப்பிரசாரம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் பிஎம்எஸ் சங்கத்தைச் சேர்ந்த என்.அருணகிரிசுவாமி, சி.ஐ.டி.யு சங்கத்தின் பாலசுப்பிரமணியம், விடுதலைச் சிறுத்தைகள் ஏ.வி.சக்திவேல், எம்.எல்.எப் சா.காதர்மைதீன், தேமுதிகவைச் சேர்ந்த டி.ஜோசப்கிளாட்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.