அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

விருதுநகரில் வடக்கு மாவட்ட த.மா.கா நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்

விருதுநகர் வடக்கு மாவட்ட த.மா.கா நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் தனியார் அரங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :24 ஆகஸ்ட் 2015, 1:28 pm

விருதுநகர் வடக்கு மாவட்ட த.மா.கா நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் தனியார் அரங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

   இக்கூட்டத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் க.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். இதில், முன்னாள் மக்களவை உறுப்பினர் மற்றும் மேலிட பொறுப்பாளர் உடையப்பன் முன்னிலை வகி்த்தார். இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் அரசன் வி.கணேஷ்குமார், மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் என்.செல்வம், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ்.ராமமூர்த்தி, சந்தானம், மாவட்ட எஸ்.சி, எஸ்.டி பிரிவு தலைவர் முருகேசன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் அமிர்ஜான் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில், மதுவிலக்கை அமுல்படுத்தக்கோரி வடக்கு மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளிலும் தொகுதிக்கு 50 ஆயிரம் கையெழுத்து வீதம் வாங்குவது, விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, விருதுநகர், சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கருந்திரி தயாரிப்பு தொழிலில் ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருவதால், அதை தயார் செய்வதற்கு எளிய முறையில் உரிமம் வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவ வேண்டும். மக்களை நோக்கி என்ற சுற்றுப்பயணத்தில் விருதுநகர் மாவட்டத்திற்கு  செப்-21ம் தேதி வருகை கரும் மாநில தலைவர் ஜி.கே.வாசனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.