விருதுநகர் மாவட்ட விவசாயிகள் பயனடையும் வகையில் 12 பயிர்களுக்கு தேசிய வேளாண் காப்பீட்டு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியர் வே.ராஜாராமன் தெரிவித்துள்ளார்.
இம்மாவட்டத்தில் நிகழாண்டு காரீப்-2015ல் மத்திய மற்றும் மாநில அரசால் தேசிய வேளாண் காப்பீட்டு திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இம்மாவட்டத்திற்கு 12 பயிர்களுக்கு தேசிய வேளாண் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதில், நெல்-2, கம்பு, சோளம், மக்காச்சோளம், துவரை, உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை, எள், பருத்தி, கரும்பு ஆகிய பயிர்களுக்கு உள்ளது.
இத்திட்டத்தில் சேருவதற்கான கடைசி நாள் வருகிற 15.9.2015 அல்லது அப்பயிர்களுக்கான விதைப்பு மற்றும் நடவு செய்து ஒரு மாத்திற்குள்ளும், நெல்-2(சம்பா) 15.12.2015 க்குள் காப்பீடு செய்து கொள்ளலாம். இதற்கான காப்பீட்டு பிரிமிய தொகையை தங்கள் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வங்கிகளில் முன்மொழிவு படிவத்துடன், சிட்டா அடங்கல் விவரத்துடன் செலுத்த வேண்டும்.
மாநில அரசின் விவசாய துறையால் பயிர் அறுவடை காலத்தில் சோதனைகள் நடத்தப்படும். அதோடு, நடப்பு பருவத்தின் சராசரி மகசூலை கடந்த 3, 5 ஆண்டுகால உத்திரவாத மகசூலோடு ஒப்பிடும் போது நிகழ் பருவத்தில் எவ்வளவு குறைந்துள்ளதோ அந்த விகிதத்தின் அடிப்படையில் விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கப்படும். இது தொடர்பான முழு விவரங்களையும் அறிந்து கொள்வதற்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை விவசாயிகள் அணுகி பயனடையுமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
போலி என்ஜின் ஆயில் தயாரிப்பு: 2 போ் கைது!

மகளிா் இடஒதுக்கீடு மசோதா தோல்வி! எதிா்க்கட்சி உண்மை முகம் அம்பலம்: ரேகா குப்தா
இந்தியாவின் முதல் விண்வெளிப் பயணம்

சமூக ஊடகம் மூலம் சிறுவனுடன் நட்பு: தப்பியோடிய சிறுமி மீட்பு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

