விருதுநகர் பகுதியில் நடைபெற இருந்த 5 சிறுமிகளின் திருமணம் தடுத்து நிறுத்தி சமூக நலத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டப் பகுதிகளில் காரியாபட்டியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், சென்னையைச் சேர்ந்த மனமகன் பாண்டியராஜன்(25) ஆகியோருக்கு இண்று திருமணம் நிச்சயம் செய்திருந்தனர். அதேபோல், ராஜபாளையம் அருகே வேண்டு்ராயபுரம் 15 வயது சிறுமிக்கும், வெள்ளையாபுரத்தைச் சேர்ந்த ரெங்கசாமி(35) என்பவருக்கு 2-வது திருமணமும், திருச்சுழி அருகே இலுப்பையூர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், சென்னையைச் சேர்ந்த சுரேஷ்(25), புளியங்குளத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கும், கட்டனூர் பகுதியைச் சேர்ந்த தொண்டிக்கருப்பு(24), அருப்புக்கோட்டை அருகே வெள்ளைக்கோட்டையைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், பாளையம்பட்டியைச் சேர்ந்த தர்மராஜ்(25) ஆகியோருக்கும் திருமணம் செய்ய நிச்சயம் செய்து, அதற்கான அனைத்து ஏற்பாடுகளைௌயும் இருவீட்டார்களும் தயார் செய்து வைத்திருந்தனர்.
இது தொடர்பாக புதன்கிழமை இரவு ஆட்சியருக்கு சிறுமிகள் திருமணம் நடப்பதாக சமூக ஆர்வலர்கள் ரகசிய தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள், குழந்தைகள் தடுப்பு காவல் துறையினர், சைல்டு லைன் அமைப்பினர் ஆகியோருக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கும் படி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அதிகாரிகள் குழுவினர் பிரிந்து சென்று திருமணம் நிச்சயித்த இருவீட்டாரிடமும் வயது குறைந்த சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைப்பதால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.
அதனால், குறிப்பிட்ட வயதை அடைந்த பின் திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து கொள்ள வலியுறுத்தினர். இதை மீறும் பட்சத்தில் காவல் துறை மூலம் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து விளக்கமாக இருவீட்டாரிடமும் எடுத்துரைத்தனர். அதன் பின்னர் போலீஸார் பாதுகாப்புடன் சிறுமிகளை அழைத்து வந்து விருதுநகரில் செயல்பட்டு வரும் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி நிலவரம் - வேப்பனஅள்ளி! அதிமுக, திமுக வெற்றியை தீா்மானிக்கும் தவெக, நாதக!

பரமத்தி வேலூா் தொகுதி! மீண்டும் நேரடி போட்டியில் திமுக-அதிமுக!
தொகுதி நிலவரம்- சேலம் மேற்கு! நான்குமுனைப் போட்டியால் விசிலடிக்கும் வேட்பாளா்!

சங்கராபுரத்தில் ஹாட்ரிக் முனைப்பில் திமுக! வீழ்த்த முயலும் அதிமுக!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

