விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்கள் மூலம் கடந்த மூன்று மாதங்களில் மலிவு விலை உணவு விற்பனையின் மூலம் ரூ.27.07 லட்சம் கிடைத்துள்ளதாக நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குநர் எஸ்.கலைச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் சுகாதாரமான முறையிலும், மலிவு விலையிலும் உணவு வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார். இதன் மூலம் நகரங்களில் சுமை தொழிலாளர்கள், கூலி தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், குறைந்த ஊதியத்தில் பணியாற்றுவோர் பயனடையும் வகையில் அம்மா உணவகங்கள் சென்னையில் தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சிகளில் இத்திட்டம் தொடங்கி செயல்படுத்தப்படுகிறது.
இந்த உணவகங்களில் காலை 7 மணி முதல் 10 மணி வரையில் இட்லி சாம்பாரும், 12 மணி முதல் 3 மணி வரையில் சாம்பார் சாதம், தயிர் சாதம், கருவேப்பில்லை சாதம் ஆகியவைகளை மகளிர் மேம்பாட்டு ஆணையத்தால் நியமிக்கப்பட்ட மகளிர் குழுக்களால் சுகாதாரமான முறையில் தயார் செய்து குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. அதில், இட்லி ஒரு ரூபாய்க்கும், சாம்பார் சாதம், கருவேப்பிலை சாதம் ரூ.5ம், தயிர் சாதம் ரூ.3க்கும் விநியோகம் செய்யப்படுகிறது.
அதேபோல், விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர் நகராட்சியில் பஜார், தலைமை மருத்துவமனை வளாகம், அருப்புக்கோட்டை, ராஜபாளையம், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், திருத்தங்கல் நகராட்சிகளில் 8 அம்மா உணவகங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த உணவகம் தொடங்கப்பட்ட 97 நாள்களில் ரூ.27.07 லட்சத்திற்கு உணவு வகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பரமத்தி வேலூா் தொகுதி! மீண்டும் நேரடி போட்டியில் திமுக-அதிமுக!
தொகுதி நிலவரம்- சேலம் மேற்கு! நான்குமுனைப் போட்டியால் விசிலடிக்கும் வேட்பாளா்!

சங்கராபுரத்தில் ஹாட்ரிக் முனைப்பில் திமுக! வீழ்த்த முயலும் அதிமுக!

விழுப்புரம் மாவட்டத்தில் 19 வேட்பாளா்கள் மீது வழக்கு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

