/

மதுவால் வந்த வினை: டாஸ்மாக் கடை மோதலில் இளைஞர் அடித்துக்கொலை, 6 பேர் கைது

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே அரசு டாஸ்மாக் கடையில் இரு கிராமத்து இளைஞர்களிடம் ஏற்பட்ட மோதலில் பிரவின் என்ற இளைஞரை ஞாயிற்றுக்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

News image
Updated On :31 ஆகஸ்ட் 2015, 5:33 am

ராஜேஷ் கண்ணன்

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே அரசு டாஸ்மாக் கடையில் இரு கிராமத்து இளைஞர்களிடம் ஏற்பட்ட மோதலில் பிரவின் என்ற இளைஞரை ஞாயிற்றுக்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

சிறுகனூர் அருகேயுள்ள கொனலை கிராமத்தில் அரசு மதுபானக்கடை உள்ளது. இந்த கடையில் மேட்டு இருங்களூர் மற்றும் கல்பாளையம் ஆகிய கிராமத்தினைச் சேர்ந்த இளைஞர்கள் மதுக்கடை பாரில் உட்கார்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது இரு கிராமத்தினைச் சேர்ந்த இளைஞர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்தகராறு கைகலப்பில் முடிந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் அருகில் கிடந்த மரக்கட்டையினால் இரு கோஷ்டியினரும் மோதிக் கொண்டதில் மேட்டு இருங்களூர் தெற்குத்தெருவைச் சேர்ந்த தனராஜ் மகன் பிரவின் வயது (21) என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயரிழந்தார்.

இந்த கொலை தொடர்பாக சிறுகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஸ்ணன் வழக்கு பதிந்து கல்பாளையத்தைச் சேர்ந்த ஜெகநாதன் மகன்கள் லோகநாதன் (38), இவரது தம்பி விசுவநாதன் (35), சுப்ரமணியன் மகன் மதிவாணன் (24), கொணலையைச் சேர்ந்த ரோஜ்மாணிக்கம் மகன் சக்ரியாஸ் (24), புறத்தாக்குடியைச் சேர்ந்த ஞானந்தராயர் மகன் ராபர்ட் (34), செபஸ்தியார் மகன் பிரபு (22) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.