தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

நிரம்புகிறது பாபநாசம் அணை! அணைகளுக்கு 5000 கனஅடி நீர்வரத்து

திருநெல்வேலி மாவட்டத்தில் 143 அடி கொள்ளளவு கொண்ட பிரதான அணைகளில் ஒன்றான பாபநாசம் அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை 140 அடியை தாண்டியது.

News image
Updated On :1 டிசம்பர் 2015, 5:14 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டத்தில் 143 அடி கொள்ளளவு கொண்ட பிரதான அணைகளில் ஒன்றான பாபநாசம் அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை 140 அடியை தாண்டியது. அணை புதன்கிழமை நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த 3 தினங்களாக மழை நீடித்து வருகிறது. செவ்வாய்க்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): பாபநாசம் அணை-50, பாபநாசம் கீழ் அணை-14, சேர்வலாறு அணை-31, மணிமுத்தாறு அணை-6, கடனாநதி அணை-40, ராமநதி அணை-11.

பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 2829 கனஅடியும், சேர்வலாறு அணைக்கு விநாடிக்கு 1000 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 883 கனஅடியும், கடனாநதி அணைக்கு விநாடிக்கு 468.91 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 160.53 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.

143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் காலை 9 மணி நிலவரப்படி 140 அடியை தாண்டியது. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் புதன்கிழமை முழுக் கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 150.39 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 92.15 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 83 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 82 அடியாகவும் இருந்தது.

கடனாநதி, ராமநதி அணைகளிலிருந்து உபரிநீர் 650 கனஅடியும், பாபநாசம் கீழ் அணையிலிருந்து 1500 கனஅடியும் உபரிநீர் தாமிரவருணி ஆற்றில் செல்வதாக அணை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.